Published : 23 Jan 2019 10:29 AM
Last Updated : 23 Jan 2019 10:29 AM

மதுரையில் ஜன.27-ல் பிரதமர், முதல்வர், அமைச்சர்கள் பங்கேற்பு: பாஜக பொதுக்கூட்ட மேடை அருகிலேயே எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா - பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய படையினர் ஆய்வு

மதுரையில் வரும் 27-ம் தேதி பாஜக பொதுக்கூட்டம் நடக்கும் இடத்துக்கு அருகிலேயே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டும் விழாவும் நடைபெற உள்ளது. இதில் பிரதமர், முதல்வர், துணை முதல்வர், மத்திய, மாநில அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக மத்திய அரசு ரூ.1,264 கோடியை அனுமதித் துள்ளது. இதையடுத்து மருத்துவ மனை கட்டுமானப் பணியை தொடங் கும் வகையில் அடிக்கல் நாட்டும் விழா வரும் 27-ம் தேதி நடை பெறுகிறது.

பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள இந்த விழாவை எங்கு நடத்துவது என்பதில் குழப்பம் நிலவி யது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள தோப்பூரிலேயே நடத்தலாம் எனத் திட்டமிடப்பட்டது. அங்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. மேலும் விமான நிலையத்தில் இருந்து 15 கி.மீ. தூரம் உள்ளது. இவ்வளவு தூரம் காரில் செல்ல பாதுகாப்பு வசதிகள் செய்வதில் சிரமம் எனத் தெரிவிக் கப்பட்டது.

இதையடுத்து மதுரை சுற்றுச் சாலையில் உள்ள தனியார் மருத் துவக் கல்லூரி அரங்கம், மதுரை காமராசர் பல்கலைக்கழக அரங்கம் என இதில் ஒரு இடத்தில் நடத்தலாம் எனத் திட்டமிடப்பட்டது. இப்பகுதி யில் நடத்தினால் பாஜக பொதுக் கூட்டம் நடக்கும் மண்டேலா நகருக்கு கட்சியினர் வருவதில் சிரமம் ஏற்படும் எனத் தெரிவிக்கப் பட்டது.

மேலும் அரசு நிகழ்ச்சி, கட்சிக் கூட்டத்தை தொடர்பில்லாத வெவ் வேறு இடங்களில் நடத்தினால் விழா உற்சாகமாக அமையாது என பாஜகவினர் கருதினர். இதனால் கட்சி விழா நடக்கும் இடம் தேர் வாகி ஒரு வாரம் ஆகியும் அரசு நிகழ்ச்சிக்கான இடம் உறுதி யாகாமல் குழப்பம் நிலவியது.

இந்நிலையில், பிரதமர் பங்கேற் கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழாவை, பாஜக பொதுக்கூட்டம் நடக்கும் இடத் துக்கு 100 மீட்டர் தொலைவிலேயே ஏற்பாடு செய்யுமாறு டெல்லியில் இருந்து நேற்று உத்தரவு வந்தது. இதற்கேற்ப பிரதமரின் பயணத் திட்டம் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மதுரை ஆட்சியர் எஸ்.நடராஜன், மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன், எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் உள்ளிட்டோர் அரசு விழா நடக்கும் இடத்தை நேற்று ஆய்வு செய்தனர்.

பிரதமர் பயண திட்டம்

டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் காலை 8 மணிக்குப் புறப்படும் பிரதமர் மோடி 11.15 மணிக்கு மதுரை விமான நிலையம் வருகிறார். அங்கிருந்து 11.20-க்கு காரில் புறப்பட்டு அரசு விழா நடக் கும் இடத்துக்கு 11.30 மணிக்கு சென்றடைகிறார். 12 மணி வரை அரசு விழாவில் பங்கேற்று எய்ம்ஸ் மருத் துவமனைக்கு அடிக்கல் நாட்டுகி றார். 12.05 மணிக்கு பாஜக கூட்ட மேடைக்கு வருகிறார். அங்கு பேசிய பிறகு 12.55 மணிக்கு காரில் புறப் பட்டு விமான நிலையத்தை பிற் பகல் 1.05 மணிக்கு வந்தடைகிறார். அங்கிருந்து 1.10 மணிக்கு புறப்படும் பிரதமர் கொச்சி செல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x