Published : 23 Jan 2019 10:11 AM
Last Updated : 23 Jan 2019 10:11 AM

பொதுமக்களின் ஆரோக்கியத்துக்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்படத்தை வேடிக்கை பார்க்க முடியாது: நிலுவை வழக்குகளை உடனடியாக முடிக்க நீதிபதிகள் உத்தரவு

பொதுமக்களின் ஆரோக்கியத் துக்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப்படத்தை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது என கருத்து தெரிவித்துள்ள உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதுதொடர்பான நிலுவை வழக்குகளை உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும் என கீழமை நீதிமன்றங்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

தனியார் பால் நிறுவனங்கள் கலப்படம் செய்கின்றன என கடந்த 2017-ம் ஆண்டு பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம் சாட்டியிருந்தார். இதையடுத்து தனியார் பால் நிறுவனங்கள் அவருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. அந்த வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் தமிழகத்தில் நிலுவையில் உள்ள பால் கலப்படம் தொடர்பான வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது உணவுப் பாதுகாப்புத்துறை இயக் குநர் டாக்டர் வனஜா நேரில் ஆஜராகி அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார்.

அறிக்கை தாக்கல்

அதைப் படித்துப்பார்த்த நீதிபதி கள் பின்னர் கூறியதாவது: பொது மக்களின் ஆரோக்கியத்துக்கு மிரட்டல் விடுக்கும் பால் கலப் படத்தை கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. இந்த விஷயத் தில் நீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் அதிகாரிகளும் சோதனைகளை தீவிரப்படுத்தியுள் ளனர்.

எடுக்கப்பட்ட 790 மாதிரி சோதனை முடிவுகளில் 113 சோதனைகள் தரம் குறைந்தவை என கண்டறியப்பட்ட பிறகும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

பால் கலப்படத்தை சாதாரண மாக எடுத்துக்கொள்ள முடியாது. பால் கலப்பட பேர்வழிகள் மற்றும் நிறுவனங்கள் மீது குற்றவியல் மற்றும் உரிமையியல் ரீதியாக எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அரசு அதிகாரிகள் வரும் பிப்.26-ம் தேதிக்குள் விரிவான அறிக்கையாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

எத்தனை வழக்குகள்

தமிழகம் முழுவதும் பால் கலப்படம் தொடர்பாக எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட் டுள்ளன, அந்த வழக்குகளின் தற்போதைய நிலவரம் என்ன, வசூலிக்கப்பட்ட அபராதம் எவ் வளவு போன்ற விவரங்களை ஆண்டுவாரியாக கீழமை நீதிமன்றங்களிடம் அறிக்கையாக பெற்று உயர் நீதிமன்ற பதிவுத்துறை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்குகளை கீழமை நீதிமன் றங்கள் முன்னுரிமை கொடுத்து உடனடியாக விசாரித்து முடிக்க வேண்டும்.

அதிகாரிகளை கண்காணிப்பு

பாலின் தரத்தை அதிகாரிகள் இடைவிடாது திடீர் சோதனை நடத்தி ஆய்வு செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் நாங்களும் அதிகாரிகளின் செயல்பாடுகளை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறோம் என்பதை மறந்துவிட வேண்டாம். ஒருவேளை உணவு பாதுகாப்பு துறையின் நடவடிக்கை கள் திருப்தி அளிக்கவில்லை என்றால் சுகாதாரத்துறைச் செயலாளரை நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும்.

இவ்வாறு நீதிபதிகள் எச்சரித்து விசாரணையை வரும் பிப்.26-க்கு தள்ளிவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x