Published : 23 Jan 2019 09:50 AM
Last Updated : 23 Jan 2019 09:50 AM

அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வழிபாட்டு தலங்கள் எத்தனை? - 4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு 

கோவை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அனுமதியின்றி கட்டியுள்ள விநாயகர் கோயிலை அகற்றக் கோரியும், அரசு புறம் போக்கு நிலங்கள், பாதைகளை ஆக்கிரமித்து வழிபாட்டுத் தலங் களை கட்டக் கூடாது என்ற அரசு ஆணையை முறையாக நடை முறைப்படுத்தக் கோரியும் பெரியார் தி.க-வின் பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2005-ல் தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இவ்வழக்கை கடந்த ஜன.4-ல் விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், ‘அரசு புறம்போக்கு நிலங் கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கோயில் கட்டுவதை அறநிலையத் துறை ஊக்குவிக்கக் கூடாது. அவ்வாறு ஆக்கிரமித்து கட்டியுள்ள வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும். தெய்வங்களாக இருந்தாலும் ஆக்கிரமிக்க உரிமை இல்லை. எனவே தமிழகம் முழுவதும் அரசு மற்றும் புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப் பட்டுள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் குறித்த புள்ளி விவரங்களை ஜன.21-க்குள் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும்’ என உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

இவ்வழக்கு நேற்று மீண்டும் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் துரைசாமி, இளங் கோவன் ஆகியோர் ஆஜராகி, நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு இன்னும் எந்த அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை என்றனர்.

அப்போது அரசு தரப்பில் வழக் கறிஞர்கள் மகாராஜா, ஜானகி ஆகி யோர் ‘‘இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் அனைத்து துறை அதி காரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப் பியுள்ளார்’ எனக்கூறி அந்த சுற் றறிக்கையை தாக்கல் செய்தனர். பின்னர் இதுதொடர்பான விவரங் களை தாக்கல் செய்ய 4 வாரம் அவகாசம் தேவை’ என்றனர்.

அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து, அதற்குள் இதுதொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x