Last Updated : 23 Jan, 2019 09:43 AM

 

Published : 23 Jan 2019 09:43 AM
Last Updated : 23 Jan 2019 09:43 AM

கன்னியாகுமரியில் ரூ.22.5 கோடியில் பிரமிப்பில் ஆழ்த்தும் வெங்கடாசலபதி கோயில்: ஜன. 27-ல் மஹா கும்பாபிஷேகம்; யாகசாலை பூஜைகள் தொடங்கின

திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22.5 கோடியில் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலதி கோயிலில் வரும் 27-ம் தேதி மஹா கும்பாபி ஷேகம் நடைபெறுகிறது. இதையொட்டி யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின.

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவளாகத்தில், கேந்திரா நிர்வாகம் வழங்கிய ஐந்தரை ஏக்கர் நிலத்தில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் ரூ.22.5 கோடி செலவில் வெங்கடா சலபதி கோயில் கட்டுமானப்பணி கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 13-ம் தேதி தொடங்கியது.

திருப்பதி தேவஸ்தான சிற்பக்கலை கல்லூரியில் வெங்கடாசலபதி உள்ளிட்ட தெய்வங்களின் சிலைகள் வடி வமைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டன. 2 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள இக் கோயிலில் மேல்தளத்தில் வெங்கடா சலபதி, பத்மாவதி தாயார், ஆண்டாள், கருடாழ்வாருக்கு தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்பம்சமாக ஆண்டுதோறும் சித்திரை விசு தினமான ஏப்.14-ம் தேதி மூலவர் ஏழுமலையான் பாதத்தில் சூரிய ஒளி விழும் வண்ணம், பொறியியல் வல்லுநர்களால் இக்கோயில் வடிவமைக் கப்பட்டுள்ளது.

கல்யாண அரங்கம்

கோயிலின் கீழ்தளத்தில் இரண் டாயிரம் பக்தர்களுக்கு மேல் அமரும் வண் ணம் சீனிவாசா கல்யாண அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தியான அரங்கம், முடி காணிக்கை செலுத்தும் இடம், தேரோட்டம் மற்றும் சுவாமி வாகன பவனிக்காக 4 மாடவீதிகள், வாகனங்கள் நிறுத்தும் இடம், அர்ச்சகர்களுக்கான வீடுகள், கோசாலை, தெப்பக்குளம், தோரண நுழைவுவாயில், அன்னதான மண்டபம், பூங்கா, கோயிலுக்கு செல்ல சின்ன முட்டம் துறைமுகச் சாலையில் இருந்து தனி கான்கிரீட் பாதை ஆகி யவையும் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏழுமலையான் சந்நிதிக்கு எதிரே 40 அடி உயர கொடிமரம் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. யாகசாலை பூஜைகள் நேற்று தொடங்கின. வரும் 27-ம் தேதி காலை 7.30 மணி முதல் 9 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்று பகல் 12.30 மணிக்குப் பிறகே மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். மாலையில் நிவாச திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

கும்பாபிஷேகத்துக்கு முன்பாகவே இக்கோயிலுக்கு பக்தர்கள், சுற்று லாப் பயணிகள் அதிகம் வரத் தொடங்கி உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x