Published : 21 Jan 2019 09:32 AM
Last Updated : 21 Jan 2019 09:32 AM

கடும் போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் உதகை

சர்வதேச அளவில் பிரபல சுற்றுலா நகரமான உதகையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. நகரில் வாகன நிறுத்துமிடம் இல்லாததே இதற்கு முக்கியக் காரணம் என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

உதகைக்கு ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதி கரித்து வருகிறது. கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 28 லட்சம் சுற்றுலாப் பயணிகள் உதகைக்கு வந்துள்ளனர்.

உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் பெரும்பாலானோர் வாகனங்களிலேயே வந்து, செல்கின்றனர். இவ்வாறு வாகனங் களில் வருவோர், தங்கள் வாகனங் களை நிறுத்த இடமின்றித் தவிக் கின்றனர்.

வாகன நிறுத்துமிடம் தேடி, நகரைச் சுற்றி சுற்றி வருகின்றனர். இடம் இல்லாததால் சாலையோரங்களில் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். இதனால் சாலையில் வாகனங்கள் செல்ல இடமில்லாமல், கடும் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது.

நகருக்குள் பெரிய வாகனங் கள் நுழையக்கூடாது என்ற உத்தரவு காரணமாக, சுற்றுலாப் பேருந்துகளிலும், பெரிய வாகனங்களிலும் வருவோர் குறைந்தது 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு வெளியிலேயே வாகனங்களை நிறுத்திவிட்டு, தாங்கள் செல்ல வேண்டிய இடத்துக்குச் செல்வதற்குள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இதுகுறித்து உதகை நகர மக்கள் விழிப்புணர்வு சங்கத் தலைவர் ஜெ.ஜனார்தனன் கூறும் போது, "உதகை நகரின் சாலை கள் மிகவும் குறுகலானவை. ஆங்கிலேயர் காலத்தில் அமைக் கப்பட்ட சாலைகள் விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் உள்ளன. இந்நிலையில், குதிரைப் பந்தய மைதானத்தில் பார்க்கிங் ஏற்படுத்த வருவாய்த் துறை அதிகாரிகள் முயற்சிக்கின்றனர். நகரின் ஒரே திறந்தவெளி சதுப்பு நிலம் குதிரைப் பந்தய மைதானம். நகரின் நுரையீரல் போன்றது. சுற்றுச்சூழலுக்கு இன்றியமையாத நிலமாகும். `பார்க்கிங்` என்ற பெயரில் உள்ளே நுழைய முயற்சிக்கும் வருவாய்த் துறை, பின்னர் சிறிதுசிறிதாக முழு குதிரைப் பந்தய மைதானத்தையும் கபளீகரம் செய்து விடும். குதிரை பந்தய மைதானம் முழுவதும் கட்டிடங்கள் பெருகிவிடும்.

குதிரை பந்தய மைதானத்தைத் தவிர, நகரில் பல இடங்கள் உள்ளன. அங்கு வருவாய்த் துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் பார்க்கிங் வசதி ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும்.

உதகையில் முக்கியமான பகுதி பர்ன்ஃபுட் ஏரி. நகரின் முகப்பு பகுதியில் உள்ள இந்த ஏரியை தனியார் ஆக்கிரமித்து, பல ஆண்டுகளாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலத்தை மீட்க வருவாய்த் துறை எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

நகராட்சி நிர்வாகம் சார்பில், காந்தல் பகுதியில் பல லட்சம் மதிப்பில் பார்க்கிங் தளம் அமைக் கப்பட்டது. ஆனால், இந்த பார்க்கிங் தளம் அமைக்கப்பட்ட நோக்கம் மாறி, தற்போது வாகனப் பணிமனையாக உருமாறியுள் ளது. இந்த இடங்களில் பார்க்கிங் வசதியை ஏற்படுத்தாமல், வழக்கு விவகாரம் உள்ள நிலத்தில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த முயற் சிப்பது மக்களின் கோரிக்கையை திசை திருப்புவதாகும். உதகை போன்ற இட நெருக்கடி உள்ள நகரில், `மல்டி லெவல்` பார்க்கிங் வசதியை ஏற்படுத்த வேண்டும்" என்றார்.

உதகை எம்எல்ஏ ஆர்.கணேஷ் கூறும்போது, "கோடைகாலத்தில் வாகன நெரிசலால் நகரமே சிக்கித் தவிக்கிறது. இதுகுறித்து சட்டப்பேரவையில் பலமுறை பேசியுள்ளேன். முதல்வரிடமும் பிரச்சினை குறித்து விவரித் துள்ளேன்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x