Published : 20 Jan 2019 08:59 AM
Last Updated : 20 Jan 2019 08:59 AM

இணையத்தில் வைரலாகும் ஒரு நிமிட காட்சி; கார் பரிசு பெற்ற காளையின் ‘விளையாட்டு’: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியின் ருசிகர தகவல்

அலங்காநல்லூரில் அடக்க வந்த மாடுபிடி வீரர்களைப் பந்தாடி முதல் பரிசான காரை பரிசாகப் பெற்ற பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் காளையின் விளையாட்டுக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. காளையைப் பற்றி ருசிகர தகவல்கள் வெளியாகி உள்ளன.

உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நேற்று முன்தினம் நடந்தது. இதில் 14 காளைகளை அடக்கிய சிறந்த மாடு பிடி வீரராக அலங்காநல்லூரைச் சேர்ந்த ரஞ்சித்குமாரும், சிறந்த காளையாக அவ னியாபுரம் அருகேயுள்ள பரம்புப்பட்டி செல்லி யம்மன் கோயில் காளையும் தேர் வானது.

இந்த வீரரும், காளை உரிமையாளரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, முதல்வர் கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கார்களை பரிசாக வழங்கினர். இதில், முதல் பரிசு பெற்ற சிறந்த காளையான பரம்புப்பட்டி செல்லியம்மன் கோயில் காளை வாடிவாசல் முன் அடக்க வந்த வீரர்களைத் தூக்கி வீசி பந்தாடியது.

புழுதிபறக்க நின்று ஆடிய இந்தக் காளை யின் ஆவேச ஆட்டம் வீடியோ காட்சியாக இணையத்தில் தற்போது வைரலாகி வரு கிறது. இந்த வீடியோ காட்சியை முக நூல், ‘வாட்ஸ் அப்’களில் ஜல்லிக்கட்டு ஆர் வலர்கள், பொதுமக்கள் அதிக அளவு மற்ற வர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.

வீடியோவில், செல்லியம்மன் கோயில் காளை வாடிவாசலை விட்டு வெளியே வந் ததும், வீரர்களையும், பார்வையாளர்களை யும் பார்த்து மிரண்டு ஓடாமல் முதலில் வீரர் களை நோக்கிப் பாய்கிறது. பின்னர் வீரர் களைப் புறமுதுகு காட்டி ஓட வைக்கிறது.

மேலும், வாடிவாசல் அருகே ஒளிந்து நின்ற வீரரைத் தூக்கி வீசிப் பந்தாடுகிறது. அவரை விடாமல் தொடர்ந்து புரட்டிப் புரட்டி எடுக்கிறது. அந்த வீரரைக் காப்பாற்ற மற்ற வீரர்கள் அந்தக் காளையின் கவனத்தை திசைதிருப்ப, பின் பகுதியில் நின்று கூச்சலிடுகின்றனர்.

இதனால், திரும்பிப்பார்த்து ஆவேசமடை யும் அந்தக் காளை, திமிரிக்கொண்டு வீரர்களை நோக்கி மீண்டும் பாய்கிறது.

அனைவரும் நாலாபுறமும் சிதறி ஓடு கின்றனர். ஆனாலும் அந்தக் காளை விடாமல் அவர்களைத் துரத்துகிறது. வீரர்கள் கேலரி கள் மீது ஏறி தப்புகின்றனர். அப்போது வாடி வாசலில் ஒளியும் ஒரு வீரரைப் பார்த்ததும் அவரை நோக்கி மீண்டும் காளை ஆவேசமாக ஓடுகிறது. அந்த வீரர் வாடிவாசலுக்குள் ஓடி தப்புகிறார். ஆனாலும், கோபம் தணியா மல் வாடிவாசல் முன் ஒருவீரர்கூட இல்லா மல் ‘இந்த விளையாட்டில் நான்தான் ராஜா, என்னை அடக்க யாரும் இல்லை’ என்று சொல்வதுபோல, செருக்கோடும், கம்பீரமாகவும் அந்தக் காளை நின்றது.

கவனம் சிதறாமல் பார்ப்பதற்குப் பிரமிப் பையும், ஆர்வத்தையும் ஏற்படுத்தும் அந்த ஒரு நிமிட வீடியோ காட்சி இணையத் தில் தற்போது வைரலாகிக் கொண்டிருக் கிறது.

இந்தக் காளைகளைப் பராமரிக்கும் மதுரை அருகே பரம்புப்பட்டியைச் சேர்ந்த சரவணன், தினேஷ் ஆகியோர் கூறிய தாவது:

நாங்கள் 20 பேர் சேர்ந்து குடும்பமாக இந்தக் காளையை வளர்க்கிறோம். எல் லோரும் சொந்தக்காரங்க. கன்றுக்குட்டி யிலிருந்து இந்தக் காளையை வளர்க்கிறோம். எங்க குல தெய்வம் செல்லியம்மன். யாரோ கன்றுலே இந்தக் காளையை எங்க கோயிலில் விட்டுட்டுப் போயிட்டாங்க. அதனால், அந்த அம்மன் பெயரிலேயே காளையை வளர்க்கிறோம்.

இதற்கு முன் சக்குடி, பழங்காநத்தம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுன்னு பரிசு வாங்கியது. பிடிக்க வந்தா இதே ஸ்டைலில் தூக்கிப்போட்டு பந்தாடும்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற் பதே ஒரு பெருமை. அதில், வீரர்களைத் தாண்டி பிடிபடாமல் தப்பிப்பது பெரும் சவால். ஆயிரக்கணக்கான பார்வையாளர் களின் கரகோஷத்துக்கு இடையே எங்கள் காளை, துரத்தும் வீரர்களை எதிர்கொண்டு அவர்களை மண்டியிட வைத்தது. இது எங்களை மகிழ்ச்சிக் கடலில் மிதக்க வைத்தது.

எங்களுடைய காளையின் அந்த ஒரு நிமிட விளையாட்டு எங்களுக்கும், எங்க ஊருக்கும் பெருமையைத் தேடி தந்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x