Published : 01 Jan 2019 11:23 AM
Last Updated : 01 Jan 2019 11:23 AM

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: டீ கடைகளில் கண்ணாடி டம்ளர் பயன்பாடு அதிகரிப்பு

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து மதுரையில் உள்ள டீ கடைகளில் கண்ணாடி மற்றும் சில்வர் டம்ளர்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். இதைத் தொடர்ந்து மதுரையில் டீ கடை, ஓட்டல்கள், பலசரக்கு கடைகளில் பிளாஸ்டிக் கவர்கள் உபயோகத்தை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். பல டீ கடைகளில் பிளாஸ்டிக் கவர்களில் பார்சல் டீ, காபி வழங்குவது தவிர்க்கப்பட்டது. சில்வர் பாத்திரம், பிளாஸ்க்குகளை கொண்டு வரவேண்டும் என வாடிக்கையாளர்களிடம் அறிவுறுத்தினர். இதனால், பெரும்பாலான டீ கடைகளில் பார்சல் டீ, காபி விற்பனை சற்று மந்தமாகவே காணப்பட்டது. பிளாஸ்டிக் ‘கப்’ கள் தவிர்க்கப்பட்டு, கண்ணாடி டம்ளர்களின் பயன்பாடு அதிகரித்தது. தல்லாகுளம் உட்பட ஒருசில இடங்களில் டீ கடை, ஓட்டல் கடைக்காரர்களே பிளாஸ்டிக் கவர்களுக்குப் பதிலாக மாற்றுப் பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அளித்து விழிப்புணர்வு ஏற்படுத் தினர்.

மதுரை உத்தங்குடியைச் சேர்ந்த டீ கடை உரிமையாளர் உதயகுமார் கூறியதாவது:

தற்போது எனது கடைக்கு டீ, காபி பார்சல் வாங்க வருபவர்கள் பாத்திரங்களை கொண்டு வருகின்றனர். மேலும், பொருட்களை வாங்கிச் செல்ல துணி பைகளை கொண்டு வருகின்றனர். இல்லாவிட்டால், 2 ரூபாய்க்கு துணி பையை வாங்கி அதில் பொருட்களை கொண்டு செல்கின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x