Last Updated : 30 Dec, 2018 09:01 AM

 

Published : 30 Dec 2018 09:01 AM
Last Updated : 30 Dec 2018 09:01 AM

‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைக்கப்பட்ட 10 கோடி ஏழைகளுக்கு பிரதமரின் கடிதங்களை பிரித்தனுப்பும் பணி தீவிரம்: டிச. 31-க்குள் விரைவு அஞ்சலில் அனுப்பும் ஊழியர்கள்

மக்களவைத் தேர்தல் விரைவில் வரவுள்ள நிலையில் ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்காக தான் செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்களைக் குறிப்பிட்டு அவர்களது வீட்டு முகவரிக்கே கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தமிழ்நாட்டில் கட் சியை வலுப்படுத்த பல்வேறு நடவடிக் கைகளை பாஜக எடுத்து வருகிறது. தேர் தலில் ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்ற நிலையில், வெற்றி-தோல்வியைத் தீர்மானிப்பதில் ஏழை மக்களின் வாக்குகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், மத்திய சுகாதாரம் குடும்ப நல அமைச்சகம் நாட்டில் சுமார் 10 கோடிக்கும் அதிகமான குடும்பங் களுக்குச் செயல்படுத்தியுள்ள 'ஆயுஷ் மான் பாரத்' என்ற தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்கப்பட்ட ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார் பிரதமர் மோடி.

அந்தக் கடிதத்தில், ஆயுஷ்மான் பாரத் - தேசிய சுகாதார காப்பீட்டுத் திட்டம் மட்டுமன்றி, குடிசைவாசிகளுக்கான வீட்டு வசதித் திட்டம், வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் சவுபாக்யா திட்டம், மிகக் குறைந்த தொகையில் காப்பீடு வழங்கும் ஜீவன் ஜோதி பீமா யோஜனா, சுரக்ஷா பீமா யோஜனா, அடல் ஓய்வூதியம், வயா வந்தன் யோஜனா ஆகிய திட்டங்கள், ஏழை, நடுத்தர இளை ஞர்களுக்கான கடன் வழங்கும் முத்ரா திட்டம் என ஏழை, எளிய மக்களுக்காக ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக, அந்தக் கடிதத்தில் ஏழை மக்களைக் கவரும் வகையில், ஏழ்மை யான சூழலில் வாழ்ந்த தனக்கு, நாட்டில் உள்ள ஏழை மக்களின் மனநிலை நன்கு தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அரசியல் கட்சியினர் கூறியபோது, “ஏழை, எளிய, அடித்தட்டு மக்களுக்கென மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைக் குறிப்பிட்டு, கடிதம் எழுதி, அவரவர் முகவரிக்கே சென்றடையும் வகையில் விரைவு அஞ்சலில் அனுப்பியுள்ளதன் மூலம், தேர்தலுக்கு முன்னதாகவே பாஜக அரசின் சாதனைகளை அடித்தட்டு மக்கள் மனதில் விதைக்க முயல்கிறார் பிரதமர் மோடி" என்றனர்.

இதுதொடர்பாக பாஜக மாநில துணைத் தலைவர் எம்.சுப்பிரமணியன் கூறியபோது, "அந்தக் கடிதத்தை தேர்தல் பிரச்சாரமாகக் கருத முடியாது. பிரதமராக மோடி பதவியேற்ற நேரத்தில் பேசும்போது, அடுத்த தேர்தலின்போது எனது முன்னேற்ற அறிக்கையுடன் வந்து மக்களைச் சந்திப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் வகையில் தனது அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களைக் குறிப்பிட்டுத்தான் அந்தக் கடிதம் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக, முத்ரா, ஓய்வூதியம், காப்பீடு உள்ளிட்ட திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே அந்தக் கடிதத்தின் முக்கிய நோக்கம்” என்றார்.

அஞ்சல் ஊழியர்கள் தீவிரம்

இதுதொடர்பாக அஞ்சல் நிலைய வட்டாரங்களில் விசாரித்தபோது, “அனைத்துக் கடிதங்களையும் விரைவு அஞ்சலில் டிச.31-ம் தேதிக்குள் அனுப்பி விட வேண்டும் என்று வாய்மொழி உத்தரவு வந்துள்ளது. ஆனால், பெரும்பாலான கடிதங்களில் முகவரிகள் முழுமையாக இல்லை. இருப்பினும், கடிதத்தில் உள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் பதிவு செய்யப்படுகிறது. விரைவு அஞ்சலுக்கான கட்டணத்தை மத்திய சுகாதாரத் துறை அஞ்சல் துறைக்கு அளிக்கும் என்று கூறப்படுகிறது" என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x