Published : 30 Dec 2018 08:59 AM
Last Updated : 30 Dec 2018 08:59 AM

கொடைக்கானல் மலைகிராம வீட்டில் காஸ் சிலிண்டர் வெடித்து 3 பேர் பரிதாப மரணம்

கொடைக்கானல், தாண்டிக்குடி அருகே மங்களங்கொம்பு மலை கிராமத்தில் காஸ் சிலிண்டர் வெடித் ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் கீழ்மலைப்பகுதி தாண்டிக்குடி அருகே உள்ள மங்களங்கொம்பு மலைகிராமத் தைச் சேர்ந்தவர் கணேசன் (51). முன்னாள் ஊராட்சி மன்ற தலை வரான இவர், மகள் பள்ளியில் படிப்பதற்காக சின்னாளபட்டியில் குடியிருந்து வந்தார்.

தற்போது பள்ளி விடுமுறை என்பதால் சொந்த ஊரான மங்களங்கொம்பில் குடும்பத்து டன் தங்கியிருந்தார். நேற்று முன் தினம் இரவு ஒரே அறையில் கணேசன், இவரது மனைவி மஞ்சுளாதேவி (43), மகள் விஷ்ணு பிரியா (9) ஆகியோர் தூங்கியுள் ளனர்.

இந்நிலையில், நேற்று அதி காலை 5.40 மணியளவில் திடீரென காஸ் சிலிண்டர் வெடித்துச் சிதறி யது. வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தீ வேகமாக பரவிய தால், கொடைக்கானல் தீயணைப்பு நிலைய வீரர்கள் வரவழைக்கப் பட்டனர். அவர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்த பிறகு, உள்ளே சென்று பார்த்தபோது கணேசன், மஞ்சுளாதேவி, விஷ்ணுபிரியா ஆகிய மூவரும் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்த சம்பவம் கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. தாண்டிக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், காஸ் விநி யோகஸதர்கள் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் கூறும் போது, காஸ் சிலிண்டர் வெடித்து தீவிபத்து ஏற்பட்டிருக்காது. இர வில் அதிக குளிர் நிலவுவதால் கதகதப்பை ஏற்படுத்துவதற்காக ஹீட்டரை கணேசன் பயன்படுத்தி யுள்ளார். இரவு முழுவதும் ஹீட்டர் தொடர்ந்து இயங்கியதால் அதிக வெப்பம் வெளிப்பட்டு மின்கசிவு ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளது. மின் வயர்களில் தீப்பற்றியதில் வீடு முழுவதும் தீ பரவி காஸ் சிலிண்டர் வெடித்திருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x