Published : 30 Dec 2018 08:57 AM
Last Updated : 30 Dec 2018 08:57 AM

எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு மனைப் பட்டா, சோலார் வசதியுடன் பசுமை வீடு

சாத்தூரில் எச்ஐவி ரத்தம் ஏற்றப் பட்ட 8 மாத கர்ப்பிணிக்கு இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பசுமை வீடு கட்டுவதற்கான ஆணைகளை விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அரசு மருத்துவமனையில் 8 மாத கர்ப்பிணிக்கு கவனக்குறைவாக எச்ஐவி பாதிக்கப்பட்ட ரத்தம் ஏற்றப் பட்டதையடுத்து, அவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பொது வாக எச்ஐவி பாதிப்புக்கு, ஏஆர்டி கூட்டு மருந்து சிகிச்சை மட்டுமே போதுமானது. ஆனால், சம்பந்தப் பட்ட பெண் மனதளவிலும், உடல் அளவிலும் பாதிக்கப்பட்டுள்ள தால் அவருக்கு மருத்துவக் குழுவி னர் பல்வேறு சிகிச்சைகளை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத் தினரையும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

வங்கிக் கணக்கு தொடக்கம்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: பாதிக்கப்பட்ட கர்ப்பிணியை 3 மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின் றனர். கர்ப்பிணியின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளது. மனத ளவில் பாதிக்கப்பட்டுள்ளதாலும், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள தாலும் வாடகை வீட்டில் வசிப்பதா லும் அவர்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா, அதே இடத்தில் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு கட்டுவதற்கான உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கர்ப்பிணியின் பெயரில் வங்கிக் கணக்கு ஆரம்பிக்கப்பட்டு அவருக்கு தேவையான நிவாரண தொகை வழங்க ஏற்பாடு செய்யப்படும்.

இதுபோன்று தவறு மீண்டும் நடக்காமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப் படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x