Published : 16 Dec 2018 08:57 PM
Last Updated : 16 Dec 2018 08:57 PM

பிரதமராக ராகுலை முன்மொழிந்தார் ஸ்டாலின்: நாசிச, பாசிச அரசை வீழ்த்த முன்வர வேண்டுகோள்

நாசிச, பாசிஸ மோடி ஆட்சியை வீழ்த்தும் வல்லமை ராகுலுக்கு உண்டு பிரதமராக ராகுல் வரவேண்டும் என ராகுல் காந்தி பெயரை ஸ்டாலின் முன்மொழிந்தார்.

 

சென்னை ராயப்பேட்டையில் நடைப்பெற்ற கருணாநிதி சிலைத்திறப்பு விழாவில் ஸ்டாலின் பேசியதாவது:

 

“சோனியா அவர்களுக்கு ஒன்றை நான் நினைவுப்படுத்த விரும்புகிறேன். இந்திரா அவர்கள் ஒருமுறை ஒன்றைச் சொன்னார். ஆதரித்தாலும் எதிர்த்தாலும் அதில் உறுதியாக இருப்பவர் தலைவர் கருணாநிதி அவர்கள் என்று.

 

அதே உறுதியை அவரது மகனாக நானும் சொல்கிறேன், ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக நான் இருக்கிறேன் என்பதைச் சொல்கிறேன். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து அளிக்கப்பட்டவுடன் சோனியா அவர்கள் தலைவர் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றை எழுதினார், அதைப்பார்த்து மகிழ்ந்த தலைவர் கருணாநிதி ஒரு செய்தியை வெளியிட்டார்.

 

அதை அப்படியே படிக்கிறேன், தமிழ் செம்மொழியாக ஒரு வரலாறு உண்டென்றால் அந்த வரலாற்றை, ஒரு பெருமையை அளிக்கும் வகையில் நீங்கள் எனக்கு எழுதிய அந்தக்கடிதம் பொன்னெழுத்துக்களால் எழுதப்பட்டு வைரங்கள் பொறிக்கப்பட்டு எதிர்காலத்தில் என் கல்லறையில் எதிர்காலத்தில் மாட்டப்படவேண்டிய ஒன்று எனது நினைவகத்தில் வைக்கவேண்டியஒன்று என்பதை குறிப்பிட்டு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் எனக்குறிப்பிட்டுள்ளார்.

 

அந்தத்தலைவரின் மகனாக நான் சொல்லவருவது என்னவென்றால் 1980-ம் ஆண்டு தலைவர் அவர்கள் இந்திரா காந்தி பிரதமராக வரவேண்டும் என குரல் கொடுத்தபோது நேருவின் மகளே வருக நிலையான ஆட்சித்தருக என்று சொன்னார். 2004-ம் ஆண்டு சென்னை தீவுத்திடலில் நடந்த பொதுக்கூட்டத்தில் சோனியா அவர்களை வரவேற்று பேசும்போது இந்திராவின் மருமகளே வருக இந்தியாவின் திருமகளே வெல்க என்று முழக்கினார்.

 

இன்று 2018-ல் அவரது திருவுருவச்சிலை திறப்புவிழாவில் நான் முழங்குகிறேன், அவருடைய மகனாக நான் தமிழகத்திலிருந்து ராகுல்காந்தி அவர்களின் பெயரை நான் முன்மொழிகிறேன். ராகுல் காந்தி அவர்களே வருக நாட்டுக்கு நல்லாட்சியை தருக, நாசிச, பாசிஸ மோடி அரசை வீழ்த்தும் அந்த வல்லமை ராகுல்காந்திக்கு உண்டு, ராகுல்காந்தி கரத்தை வலுப்படுத்துவோம். அனைவரும் ஒன்றுச்சேர்ந்து வலுப்படுத்துவோம், நாட்டை காப்பாற்றுவோம்,  ஜனநாயக தீபத்தை ஏற்றுவோம் என நானும் உங்களோடு சேர்ந்து தலைவர் சிலைத்திறப்பு விழாவில் உறுதி எடுக்கிறேன்.”

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x