Published : 15 Dec 2018 04:37 PM
Last Updated : 15 Dec 2018 04:37 PM

சென்னைப்பள்ளிகளில் பயிலும் 83,316 மாணவர்களுக்கான சிறப்பு வசதிகள்: மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் பேட்டி

சென்னை மாநகராட்சியின் கீழ் வரும் சென்னை பள்ளிகளில் பயிலும் 83316 மாணவ மாணவியருக்கு செய்துத்தரப்படும் வசதிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை ரிப்பன் மாளிகையில் கார்த்திகேயன் அளித்த பேட்டி:

“சென்னை மாநகராட்சியின் கல்வித்துறையின் கீழ் சென்னை தொடக்கப்பள்ளிகள் 119, நடுநிலைப் பள்ளிகள் 92, உயர்நிலைப் பள்ளிகள் 38 பள்ளிகள் மற்றும் 32 மேல்நிலைப் பள்ளிகள் என ஆக மொத்தம் 281 சென்னைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. மேலும் சென்னை தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் 200 மழலையர் பள்ளிகளும் இயங்கி வருகின்றன.

இதில் தொடக்கப் பள்ளிகளில் 27 ஆயிரத்து 312 மாணவ/மாணவியர்கள், நடுநிலைப் பள்ளிகளில் 17 ஆயிரத்து 874 மாணவ/மாணவியர்கள், உயர்நிலைப் பள்ளிகளில் 9 ஆயிரத்து 117 மாணவ/மாணவியர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 29 ஆயிரத்து 013 மாணவ/மாணவியர்கள் என மொத்தம் 83 ஆயிரத்து 316 மாணவ/ மாணவியர்கள் பயின்று வருகின்றனர். 

சென்னை பள்ளி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவிகிதம் தேர்ச்சி பெற்ற 33 பள்ளிகளுக்கு ரூ.33 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்று உயர்படிப்பிற்காக பொறியியல், மருத்துவம், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, செவியிலயர் மற்றும் சட்டப் படிப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு உயர்படிப்பு ஊக்கத் தொகையாக ரூ. 2 கோடியே17 லட்சத்து 2,000/- வழங்கப்பட்டது. 

10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் பெற ஆசிரியர்களுக்கும்  ரொக்கப் பரிசாக ரூ.45 லட்சத்து 24 ஆயிரத்து 700 தொகை வழங்கப்பட்டு வருகிறது. 100 சதவிகிதம் வருகை தரும் மாணவர்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.28 லட்சத்து 24 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.  

ரூ.1 கோடியே 88 லட்சத்து 78 ஆயிரத்து 504 செலவில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு, மாணவ/மாணவியர்கள்  மாலை நேர சிறப்பு வகுப்பில் சோர்வின்றி படிக்க ஏதுவாக புரதச்சத்துமிக்க, சுவையான 100 கிராம் “சுண்டல்” தினமும் வழங்கப்படுகிறது.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பொதுத் தேர்வில் பங்கு பெறும் மாணவ/மாணவியர்களுக்கு அதிக மதிப்பெண் பெறுவதற்கு ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி ரூ6 லட்சத்து 23 ஆயிரத்து 244 செலவில் மேற்கொள்ளப்பட்டது.

70 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், கற்றல் கற்பித்தல் தொய்வின்றி சிறந்து விளங்க மின்னாக்கிகள் பொருத்தப்பட்டுள்ளன. வளவகுப்பறை மற்றும் நவீன வளவகுப்பறை, 84 சென்னைப் பள்ளிகளில் நிறுவப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

சென்னை மாநகராட்சியும் தனியார் நிறுவனம் இணைந்து சீர்மிகு மின்னணு வகுப்பறை 28 பள்ளிகளில் செயல்பட்டு வருகின்றன. 200 மழலையர் பள்ளிகளில் பயிலும் மழலையர்களுக்கு விலையில்லா  வண்ணச் சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கப்படுகிறது. 9 முதல் 12 வரை பயிலும் மாணவ/மாணவியர்களுக்க சீருடைகள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் வழங்கப்பட்டு வருகின்றது.

சென்னை பள்ளி மாணவர்களின் பொது அறிவினை மேம்படுத்தும் வகையில் 254 பள்ளிகளில் நூலகம்: நிறுவப்பட்டு அதில் 3 லட்சத்து, 39 ஆயிரத்து, 602 புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் அறிவுத் திறனை மேம்படுத்தும் வகையில் அறிவியல் ஆய்வகம்,  கணித ஆய்வகம்,  பன்முகத் திறன் மேம்படுத்தும்  ஆய்வகம்,  ஆங்கில ஆய்வகம்  நிறுவப்பட்டுள்ளது.

மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் நோக்கில் சென்னைப் பள்ளிகள் அனைத்திலும்  தினசரி தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள்   ரூ.3 லட்சத்து, 30 ஆயிரத்து, 387  தொகையில் வழங்கப்பட்டு வருகின்றது. சென்னை உயர்நிலைப் பள்ளிகளில் 10-ம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற 50 மாணவ/மாணவியர்கள் தேசிய சுற்றுலா ரூ.8 லட்சத்து, 56 ஆயிரத்து, 474 செலவில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ/மாணவியர்களக்கு 5 முதல் 12 வகுப்பு வரை விலையில்லா விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றது. 11 மற்றும் 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விலையில்லா செய்முறை ஏடு வழங்கப்பட்டு வருகின்றது.

11 மற்றும் 12-ம் வகுப்பில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவ/மாணவியர்களுக்கு விலையில்லா ஆய்வகச் சட்டை வழங்கப்படுகிறது.

பள்ளி மற்றும் மாணாக்கர்களின் பாதுகாப்பிற்காக பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக பாதுகாவலர்கள்  ரூ.2 கோடியே,35 லட்சத்து,03 ஆயிரத்து, 920 தொகையிலும் தற்காலிக கணினி ஆசிரியர்கள், கணினி உதவியாளர்கள் இளநிலை உதவியாளர் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் 2017-18-ம் ஆண்டில் ரூ.1 கோடியே,94 லட்சத்து,13 ஆயிரம் தொகையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களிடையே விளையாட்டுத் திறனை மேம்படுத்த ஆண்டுதோறும் சென்னை பள்ளிகளுக்கிடையேயான விளையாட்டுப் போட்டிகள் விதிமுறைகளின்படி ரூ.21 லட்சத்து,54 ஆயிரம் செலவில் நடத்தப்பட்டுள்ளது.

Spark Integrated Programme திட்டத்தில் பதினோராம் வகுப்பைச் சார்ந்த  மாணாக்கர்கள்  பயின்று வருகின்றனர். 

இத்திட்டத்தின் நோக்கம், இம்மாணாக்கர்கள்  அனைவரும்  மருத்துவக் கல்லுhரிகள் /  பொறியியல் கல்லூரிகள் மற்றும் நாட்டின் தலைசிறந்த கல்லூரிகளில் சேர்ந்து உயர்கல்வி பயில வேண்டும் என்பதாகும்.

உண்டு உறைவிடப் பள்ளிகள்: சென்னை மேல்நிலைப் பள்ளி, சுப்புராயன் தெரு மற்றும் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சைதாப்பேட்டை ஆகிய இரு பள்ளிகளில் ரூ.32 லட்சத்து,50 ஆயிரத்து, 930 தொகையில் உண்டு உறைவிடப் பள்ளிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு 100 சதவிகிதம் தேர்ச்சி விழுகாடு பெறப்பட்டுள்ளது.

உறுதியான கட்டிடங்கள், காற்றோட்மான வகுப்பறைகள், அனைத்து வகுப்பறைகளிலும் மின்வசதி, மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கழிவறைகள் , மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப குடிநீர் குழாய்கள் மற்றும் கழிவறைகள், கழிவறைகளை பராமரிக்க மண்டல அலுவலகளின் மூலம் பெருக்குபவர்கள் மற்றும்   கழிவறைகள் சுத்தம் செய்வதற்கான பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுத்திகரிக்கப்பட்ட தூய்மையான குடிநீர் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. கல்வியில் சிறந்த நிலை அடைய சென்னைப் பள்ளி ஆசிரியர்களுக்கு புதுமைப் பள்ளித் திட்டம் 21ஆம் நூற்றாண்டு திறன்கள் (21st Century Skills) British Council மூலமாக நடத்தப்படுகிறது.  SNF @ SCHOOLS  என்ற அமைப்பு மூலம் ஆசிரியர்களுக்கு உடல் நலம் மற்றும் ஆரோக்கிய ஒருங்கிணைப்பிற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

Tech Mahindra Foundation சென்னை தொடக்க/நடுநிலைப் பள்ளி  230 ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிப் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது. அகஸ்தியா பௌண்டேஷன் நடமாடும் அறிவியல் ஆய்வகம் கொண்டு 6 முதல் 8 வரை உள்ள வகுப்பு அறிவியல் பாடத்தை எளிய உபகரணங்களைக் கொண்டு போதிக்கின்றது.

6 இடங்களில் சென்னை மாநகராட்சி தொழிற் பயிற்சி நிலையம் பிரத்தியேகமாக சென்னை பள்ளி மாணவர்களுக்கும் மற்றும்  சமுதாயத்தில் பின்தங்கிய ஏழை எளிய மாணவர்களுக்கு கணினி, எல்க்ட்ரீஷன், பிட்டர், மெக்கானிக், எல்க்ட்ரானிக் மெக்கானிக் போன்ற தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றது.

Teach for India மூலம் மாணவர்களுக்க ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்கள் ஆசிரியர்களோடு இணைந்து பயிற்றுவிக்கப்படுகின்றது.

ஸ்ரீ இராமசரண் அறக்கட்டளையின் மூலம் சென்னை மழலையர் பள்ளி மாணவர்களுக்க கற்பித்தல் உபகரணம் மற்றும் தேவையான ஆசிரியர்கள் உதவியாளர்கள் வழங்கப்பட்டுள்ளது.

Atal Tinking Lab என்ற எம்எச்ஆர்டி வாயிலாக மத்திய அரசால் சென்னை பள்ளிகள் 12 தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ROBORT  பற்றிய சிறந்த அறிவும் ஆற்றலும் உருவாக ஏதுவாக ரூ.10.00 லட்சத்தில் ஆய்வுக் கூடம் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு கார்த்திகேயன் தெரிவித்தார்.

 

 

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x