Published : 15 Dec 2018 08:44 AM
Last Updated : 15 Dec 2018 08:44 AM

சேலம் மாவட்டம் தலைவாசலில் 800 ஏக்கரில் கால்நடை ஆராய்ச்சி மையம்: முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவிப்பு 

சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்த தலைவாசல் அருகே உலகத்தரம் வாய்ந்த பலவகை கால்நடைகள் ஆராய்ச்சி மையம் 800 ஏக்கர் பரப்பளவில் அமைக் கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கெங்கவல்லியை அடுத்த வீரகனூரில் அரசு விழா நடந்தது. சேலம் ஆட்சியர் ரோஹிணி தலைமை வகித்தார். புதிய திட்டங் களுக்கு அடிக்கல் நாட்டியும், நிறைவுற்ற திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும், பயனாளிக ளுக்கு ரூ.131.51 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கி முதல்வர் பழனிசாமி பேசியதாவது:

சென்னையில் அடுத்த மாதம் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் ரூ.1.50 லட்சம் கோடி முதலீட்டை தமிழகத்துக்கு கொண்டு வந்து தொழில் வசதி ஏற்படுத்தி வேலைவாய்ப்பு அளிப் போம். தலைவாசலை அடுத்த கூட்டு ரோட்டில் 800 ஏக்கரில் உலகத்தரம் வாய்ந்த அனைத்து வகை கால் நடை ஆராய்ச்சி மையம் அமைக் கப்படும். இங்கு அனைத்து வகை கால்நடைகள் குறித்து ஆராய்ச்சி, கால்நடை வளர்ப்பு, கால்நடைகள் விற்பனை என அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

அதிமுக ஆட்சி கவிழ்ந்து, தான் முதல்வராவோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கனவு காணு கிறார். அது ஒரு நாளும் நடக்காது.

மேகேதாட்டு அணை விவகாரத் தில் நாம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளோம். நாடா ளுமன்றத்தில் நமது உறுப்பினர்கள் குரல் கொடுத்து, அவையை முடக்கி நாடாளுமன்றம் செயல்பட முடியாமல் செய்து வருகின்றனர்.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தி யாளர்களிடம் முதல்வர் கூறிய தாவது:

புதிய புயலால் பாதிப்பில்லை

வங்கக்கடலில் தோன்றியுள்ள புயல் அதிக சேதாரத்தை ஏற்படுத் தாது, பல மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேவை யான முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை எடுத்துள்ளோம்.

‘அதிமுக மூழ்கும் கப்பல்’ என செந்தில் பாலாஜி கூறுவது வேடிக்கையாக உள்ளது. அவர் திமுக-வில் இருந்தவர். கவுன்சில ராக இருந்தவர். அவருக்கு எம்எல்ஏ சீட் கொடுத்து, அமைச்சராக்கி உலகுக்கு அடையாளம் காட்டியது அதிமுக. அவர் அதிமுகவில் பலன் களை அனுபவித்துவிட்டு நன்றி இல்லாமல் பேசுகிறார். ‘நன்றி மறப்பது நன்றன்று’ என செந்தில் பாலாஜிக்காக ஈராயிரம் ஆண்டுக ளுக்கு முன்னரே திருவள்ளுவர் குறள் எழுதியுள்ளார்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x