Published : 14 Dec 2018 08:20 AM
Last Updated : 14 Dec 2018 08:20 AM

இன்றைய அரசியலில் பணமே பிரதானம்: பாஜக எம்.பி. வருண் காந்தி வருத்தம்

இன்றைய அரசியலில் பணமே பிரதானமாக இருப்பது வருத்த மளிப்பதாக உள்ளது என்று பாஜக எம்.பி.வருண் காந்தி குறிப் பிட்டார்.

வருண் காந்தி எழுதிய ‘ஏ ரூரல் மேனிபெஸ்டோ’(A Rural Manifesto)புத்தக வெளியீட்டு விழா சென்னை லயோலோ கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது. இந்த விழாவில் வருண் காந்தி பேசியதாவது:

விவசாயிகள், ஏழை மக்கள் அன்றாட வாழ்வில் சந்திக்கும் சிக்கல்களையும், அவர்களுக் கான தேவைகளையும் எடுத் துரைப்பதாக இந்த புத்தகம் அமை கிறது. பருவநிலை மாறுபாடு, தண் ணீர் பற்றாக்குறை உட்பட பல காரணங்களால் தினமும் ஒரு விவ சாயி தற்கொலை செய்துக் கொள்ளும் சூழல் நீடிக்கிறது. அவர்களின் பிரச்சினைகளை உடனே தீர்த்து வைக்க வேண்டிய கடமை எல்லாருக்கும் உள்ளது. எனவே, தண்ணீர் சேமிப்பு, சிக்கனப் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்த வேண்டும்.

ஐஐடி, ஐஐஎம் உட்பட தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் படிப் பவர்களின் எண்ணிக்கையில் சராசரியாக 91 சதவீதம் பேர் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ வகை யான பள்ளிகளில் படித்தவர் களாக இருக்கின்றனர். வெளிநாடு களில் பணிபுரியும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. அதை தடுக்க தொழில்நுட் பம் சார்ந்த துறைகளில் வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண் டும். எல்லா தரப்பட்ட மாணவர் களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சலுகைகளை சமமாக வழங்கி ஊக்குவிப்பது அவசியம். கிராமங்களில் பள்ளிகளை சீரமைத்து, அந்தப் பகுதிகளில் இருக்கும் மாணவர்களுக்கு சிறந்த கல்வி அறிவை கொடுத்தால் நாட்டின் வளர்ச்சி வேகமெடுக்கும்.

இன்றைய அரசியலில் பணமே பிரதானமாக உள்ளது வருத்தமாக இருக்கிறது. மக்களவைத் தேர்த லில் வெற்றி பெறும் எம்.பி.க் களில் முக்கால்வாசி பேர் பணக் காரர்களாக உள்ளனர். இந்நிலை மாற தேர்தல் சார்ந்த எல்லா பணி களையும் குறைந்த கால அவகாசத் தில் முடிக்க வேண்டும். நாட்டின் வளர்ச்சியை இளைஞர்களால்தான் உறுதிபடுத்த முடியும். அவர்களுக் கான சரியான வழிகாட்டுதல்களை யும், கட்டமைப்புகளை மட்டுமே நாம் உருவாக்கி தர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் லயோலோ கல்லுாரி தலைவர் ஏ.எம். ஜெயபதி பிரான்சிஸ், முதல்வர் எப்.ஆன்ட்ரூ பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x