Published : 14 Dec 2018 08:16 AM
Last Updated : 14 Dec 2018 08:16 AM

சிசிடிவி கண்காணிப்பு தீவிரம்; குற்றவாளிகளுக்கு அச்ச உணர்வு: காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தகவல்

கண்காணிப்பு கேமரா குற்றவாளி களுக்கு அச்ச உணர்வை ஏற் படுத்தி உள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் குற்றங்களை முற்றிலும் கட்டுப்படுத்த காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் நடவடிக்கை எடுத்து வருகிறார். அதைத் தொடர்ந்து சென்னை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த காவல்துறை சார்பில் விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.

இதுவரை சென்னை முழுவதும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக சென்னை பெருநகர போக்கு வரத்துக் காவல்துறை சார்பில் வட சென்னையில் ராயபுரம் முதல் எண்ணூர் வரையில் 25 கி.மீ. தூரத்துக்கு 998 கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன.

இந்த கேமராக்களின் இயக் கத்தை நேற்று காலை எண்ணூர் விரைவுச் சாலை - எல்லையம்மன் கோயில் சந்திப்பில் காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:

சென்னை மாநகரில் ‘மூன்றாவது கண்’ என்ற பெயரில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை ஓர் இயக்கமாக செய்து வருகிறோம். பல்வேறு அமைப்புகளும் தனி நபர்களும் இதற்கு உதவி வருகின்றனர். கண்காணிப்பு கேமரா வளையத்துக்குள் வந்துள்ளதால் சென்னை நகரில் பெருமளவு குற்றங்கள் குறைந்துள்ளன.

குற்றங்களைக் குறைப்பதிலும் குற்றவாளிகளைக் கண்டு பிடிப்பதிலும் இப்போது பெரு மளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. குற்றவாளிகள் தாங்கள் கண் காணிப்பு கேமராவில் கண்காணிக் கப்படுகிறோம் என்ற பயத்துடன் உள்ளனர். குற்றவாளிகளுக்கு கண்காணிப்பு கேமரா அச்ச உணர்வை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் ஏ.அருண், இணை ஆணையர் ஆர்.சுதாகர், துணை ஆணையர் பகவலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x