Published : 14 Dec 2018 07:31 AM
Last Updated : 14 Dec 2018 07:31 AM

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு 3 மாதம் அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு அறிவிப்பு

ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர் பாக விசாரித்து வரும் நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையிலான ஆணையத்துக்கு மேலும் 3 மாதம் காலநீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை மெரினா, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் நடந்த போராட்டத்தின்போது இறுதி நாளில் கலவரம் வெடித்தது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரிக்க, உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தலைமையில் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரியில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

1,956 சாட்சிகளிடம் விசாரணை

சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளில் நீதிபதி ராஜேஷ்வரன் விசாரித்து வருகிறார். கடந்த நவம்பரில் கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ்வரன், இந்த விசாரணை 6, 7 மாதங்களில் முடிக்கப்படும். 1,956 சாட்சிக ளிடம் விசாரணை நடத்த வேண்டி யுள்ளது’’ என்று தெரிவித்தி ருந்தார்.

இதற்கிடையே, விசாரணை ஆணையங்கள் தொடர்பான வழக்கு விசாரணையின்போது, ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணை ஆணையத்துக்கு மேலும் 3 மாதங்கள் மட்டுமே நீட்டிப்பு தரவேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு ஆணையத்துக்கான காலக்கெடு முடிவடைந்ததைத் தொடர்ந்து, மேலும் 3 மாதங்களுக்கு அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு தமிழக அரசிதழில் வெளியாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x