Published : 13 Dec 2018 11:04 AM
Last Updated : 13 Dec 2018 11:04 AM

சென்னை கஸ்தூரிபா காந்தி அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சுகப்பிரசவத்தில் பிறந்த 5.2 கிலோ ஆண் குழந்தை: தமிழகத்திலேயே முதல்முறை என சுகாதாரத் துறை தகவல்

தமிழகத்தில் முதல்முறையாக சென்னை திருவல்லிக்கேணி கஸ் தூரிபா காந்தி மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு சுகப்பிரசவத்தில் 5.2 கிலோ எடையுள்ள குழந்தை பிறந்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் இந்திரேஷ்குமார் குப்தா (35). இவரது மனைவி ஜெயஸ்ரீ (35). இவர்களுக்கு 10 வயதில் மகன் இருக்கிறான். இந்நிலையில், ஜெயஸ்ரீ 2-வது பிரசவத்துக்காக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த வாரம் அவருக்கு சுகப்பிரசவத்தில் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது. தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர்.

இதுதொடர்பாக கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல மருத்துவ மனை இயக்குநர் டாக்டர் விஜயா செய்தியாளர்களிடம் நேற்று கூறிய தாவது: ஜெயஸ்ரீக்கு 10 ஆண்டு களுக்கு பிறகு, சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது.

5.2 கிலோ எடையில் சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது, இந்த மருத்துவமனையில் இதுவே முதல்முறை. தாயின் ஒத்துழைப் பால் இது சாத்தியமானது. இங்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு சுகப் பிரசவத்தில் 4.8 கிலோ எடையில் ஒரு குழந்தை பிறந்தது.

பெரும்பாலும் தாய்க்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந் தால் குழந்தை அதிக எடையில் பிறக் கும். ஆனால், இந்த பெண்ணுக்கு அப்படி எந்த பிரச்சினையும் இல்லை.

குழந்தை எடை அதிகமாக இருப் பதால் தாய்ப்பால் அதிகமாக குடிக் கும். இங்கு தாய்ப்பால் வங்கி இருப்பதால், குழந்தைக்கு தேவை யான அளவுக்கு கொடுக்கப்படும். டாக்டர்கள் கண்காணிப்பில் குழந்தை உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். பிரசவம் பார்த்த டாக்டர் வித்யா உடன் இருந்தார்.

இதுபற்றி சுகாதாரத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “கடந்த 2014 மார்ச் மாதம் சென்னை வேளச்சேரி அடுத்த மேடவாக்கத் தில் உள்ள மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுதா என்பவருக்கு சிசேரியன் மூலம் 5.2 கிலோ எடையில் ஆண் குழந்தை பிறந்தது.

தமிழகத்திலேயே முதல் முறையாக சுகப்பிரசவத்தில் 5.2 கிலோ எடையில் குழந்தை பிறந் திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரும்பாலும் குழந்தை 4 கிலோ வுக்கு மேல் இருந்தாலே சிசேரியன் தான் செய்யப்படுவது வழக்கம். 5.2 கிலோ குழந்தையை சுகப்பிர சவத்தில் பிறக்க வைக்க டாக்டர்கள் எடுத்த முயற்சி பாராட்டத்தக்கது” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x