Published : 13 Dec 2018 10:08 AM
Last Updated : 13 Dec 2018 10:08 AM

தமிழக அரசிடம் மத்தியக் குழு கோரியுள்ள புயல் பாதிப்பு விவரங்கள் வழங்குவதில் தாமதம்: உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டோ ருக்கு கூடுதல் நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக உயர் நீதிமன்றக் கிளையில் பலர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே. சசிதரன், ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வருவாய்த் துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

புயல் பாதித்த பகுதிகளில் நிவார ணப்பணிகளை 24 மாவட்டங்க ளைச் சேர்ந்த 240 வட்டாட்சியர்கள் கவனித்து வருகின்றனர். புயல் பாதித்த பகுதிகளில் மின் இணைப் பைச் சரி செய்யும் பணியில் பிற மாவட்டங்களில் இருந்து 21,419 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். 201 துணை மின் நிலையங்கள் பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பு முழுமையாகச் சரி செய்யப் பட்டுள்ளது. 95 சதவீத மின் இணைப் புகள் மீண்டும் வழங்கப்பட்டுள் ளன. ஒருவருக்குக் கூட புயல் நிவாரணம் கிடைக்காமல் இருக்கக் கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

புயல் நிவாரண கணக்குக்காக பாதிப்பு குறித்த புகைப்பட ஆதாரம் கேட்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் மத்திய அரசு வழக்கறி ஞர் வாதிடும்போது, புயல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு செய்த மத்தி யக்குழு, இடைக்கால அறிக்கை தாக்கல் செய்துள்ளது. சில விளக் கம் கேட்டு தமிழக அரசுக்கு மத்தியக் குழு கடிதம் அனுப்பி யுள்ளது. அந்த விவரங்களை தமி ழக அரசு இதுவரை வழங்க வில்லை. அந்த விவரங்கள் கிடைத் ததும் மத்தியக்குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்யும் என்றார். தமிழக அரசு வழக்கறிஞர் வாதிடும்போது, மத்தியக்குழு கேட்ட விவரங்கள் இன்று (12-ம் தேதி) வழங்கப்படும் என்றார்.

மத்தியக் குழு இறுதி அறிக்கை தாக்கல் செய்ய எவ்வளவு காலம் ஆகும் என மத்திய அரசு தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை டிச.17-க்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x