Published : 13 Dec 2018 10:06 AM
Last Updated : 13 Dec 2018 10:06 AM

என்எல்சி நிறுவன 3-வது சுரங்கத்துக்கு நிலம் கொடுக்க மறுத்து 40 கிராமங்களில் தீர்மானம்

நெய்வேலி என்எல்சி நிறுவனத் தின் 3-வது சுரங்கத்துக்கு நிலம் கொடுப்பதில்லை என்று 40 கிராமங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் புதிதாக 3-வது சுரங் கத்தை ஏற்படுத்தி ஆண்டுக்கு 11.5 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி எடுக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி நெய்வேலி அருகில் உள்ள கம்மாபுரம் மற்றும் புவன கிரி ஒன்றியங்களில் 50 கிலோ மீட்டர் சுற்றளவில் 4,841.99 ஹெக்டேரில் சுரங்கம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஒன்றியங்களில் உள்ள 40 கிராமங்களில் 3-வது சுரங்கம் அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதற்கு எதிர்ப்புத் தெரி விக்கும் வகையில் ஒவ்வொரு கிராமத்திலும் கடந்த 2 நாட் களாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கூட்டம் நடத்தி வருகின்றனர். இக்கூட்டத்தில், என்எல்சி நிறுவனத்தின் சுரங்க விரிவாக்கப் பணியை உள்ளே நுழைய விடக்கூடாது என தீர் மானம் நிறைவேற்றி வருகின்ற னர். இந்நிலையில் நேற்று முன்தினம் மந்தாரக்குப்பத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 3-வது சுரங்கம் அமைப்பது பற்றி பொது மக்கள் கருத்து கேட்புக்கூட்டம் நடந்தது. கூட்டத்தையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் என்எல்சி நிறுவனம் மீது சரமாரியான குற்றச்சாட்டுகளை முன் வைத்தனர்.

இதற்கிடையில் சுரங்கத்துக் காக தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில், ஊர் கூட்டம் போட்டு, என்எல்சிக்கு நிலம் கொடுப்பதில்லை என்று தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. என்எல்சி நிறுவனத் துக்கு பலர் ஏற்கெனவே வீடு, மனை மற்றும் விவசாய நிலங்களை தந்துவிட்டு இழப் பீடு கிடைக்காமலும், வேலை வாய்ப்பு கிடைக்காமலும் பல வரு டங்களாக பாதிக்கப்பட்டு வருகின் றனர் என பொதுமக்கள் கூறினர்.

ராமதாஸ் எதிர்ப்பு

நெய்வேலியில் மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராம தாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை யில் கூறியுள்ளதாவது: விளை நிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. அந்த நிலங்கள் பொன் விளையும் பூமியாகும். கேரட் உள்ளிட்ட பயிர் கள் அங்கு சாகுபடி செய்யப்படு கின்றன. இத்தகைய தோட்டக் கலை பயிர்களை சாகுபடி செய்வ தன் மூலம் ஒரு விவசாயி ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும். இத்தகைய வளமான நிலங்களை அடிமாட்டு விலைக்கு கையகப்படுத்த என்எல்சி யும், தமிழக அரசும் துடிப்பது மிகப்பெரிய துரோகமாகும்.

இரண்டாவது சுரங்கம் அமைப் பதற்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் 10,000 ஏக்கர் இன்னும் பயன்படுத்தபடவில்லை. 1950-களில் என்எல்சிக்காக 23 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் வீடுகளையும், நிலங்களையும் கொடுத்துவிட்டு ஆதரவற்றவர்க ளாக அங்கிருந்து வெளியேறினர்.

60 ஆண்டுகளுக்கு மேலாகி யும் அந்த மக்களின் குடும்பங்க ளுக்கு நியாயமான இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்கப் படவில்லை.

இந்நிலையில், 26 கிராமங்க ளைச் சேர்ந்தவர்களின் வாழ் வாதாரங்களை பறிப்பதை சகித் துக்கொள்ள முடியாது. மக்க ளின் நிலங்களைக் கையகப் படுத்த முயன்றால், அதற்கு எதிராக நானே நேரடியாக கள மிறங்கி மக்களைத் திரட்டி போராடு வேன் என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x