Published : 13 Dec 2018 10:05 AM
Last Updated : 13 Dec 2018 10:05 AM

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தொகுதிப் பங்கீடு குறித்து ஸ்டாலின் - ராகுல் முடிவெடுப்பார்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் தகவல்

திமுக கூட்டணியில் காங்கிர ஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதிக ளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பவை குறித் தெல்லாம், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு ஸ்டாலினும் ராகுல் காந்தியும் பேசி முடிவு எடுப் பார்கள் என தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறினார்.

ஈரோட்டில் நேற்று செய்தி யாளர்களிடம் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற ஓராண்டு காலத்துக்குள்ளாகவே, பாஜகவின் மிகப்பெரிய கோட்டை களாக திகழ்ந்தவற்றை ராகுல் காந்தி தகர்த்து இருக்கிறார். மக்களவைத் தேர்தலிலும், காங்கி ரஸை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும் பலம் ராகுல் காந்திக்கு உண்டு. மோடியைப் பொறுத்தவரை இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு, உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும். தற்போதைய தேர்தல் முடிவுக்குப் பிறகு இங்குள்ள எந்தக் கட்சியும் பாஜகவோடு கூட்டு சேர வாய்ப்பில்லை.

ஈரோடு நெசவாளர்களிடம் இருந்து போர்வைகளைக் கொள் முதல் செய்து புயலால் பாதிக்கப் பட்ட பகுதிகளுக்கு வழங்காமல், வெளி மாநிலங்களில் இருந்து தரம் குறைந்த போர்வைகளை வாங்கி விநியோகம் செய்வது கண்டிக்கத் தக்கது.

திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஸ்டாலின் மிகத்தெளிவாக அறிவித்து இருக்கி றார். இந்த கூட்டணியைப் பொறுத் தவரை சில செய்திகள் பத்திரிகை களில் பெரிதுபடுத்தப்படுகின்றன. மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி புதுச் சேரியையும் சேர்த்து 40 தொகுதி களிலும் வெற்றி பெறும். கூட்டணி யில் காங்கிரஸுக்கு எவ்வளவு எண்ணிக்கை, எந்தெந்த இடங்கள் என்பதெல்லாம், தேர்தல் அறிவிக் கப்பட்ட பின்பு, ஸ்டாலினும், ராகுல் காந்தியும் பேசி முடிவு எடுப்பார்கள்.

ரஜினியைப் பொறுத்தவரை அவரது படம் வெளிவரும் முன்பு ஏதாவது ஸ்டண்ட் அடிக்க வேண்டும் என்பதற்காக 20 சதவீதம், 30 சதவீதம் கட்சிப் பணி முடிந்தது என்று கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார். அவர் கட்சி ஆரம்பிப்பார் என்ற நம்பிக்கை இல்லை. கட்சி ஆரம்பிக்காமல் நிம்மதியாக இருங்கள், பாஜகவின் வலையில் விழுந்து விடாதீர்கள் என்பதுதான் ரஜினிக்கு நான் சொல்லும் அறிவுரை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x