Published : 13 Dec 2018 10:03 AM
Last Updated : 13 Dec 2018 10:03 AM

தூத்துக்குடி துறைமுக பகுதியில் 1,000 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்

தூத்துக்குடி துறைமுகம் பகுதியில் 1,000 ஏக்கரில் துறைமுகம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும் என மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று தெரிவித்தார்.

தூத்துக்குடியில் இருந்து கொழும்பு செல்லாமல், மலேசியா, சீனா ஆகிய நாடுகளுக்கு நேரடி யாக சரக்கு பெட்டக கப்பல் போக்கு வரத்து சேவை நேற்று தொடங்கி யது. இந்த சேவையில் முதன் முதலாக தூத்துக்குடிக்கு வந்த கப் பலில் இருந்து சரக்கு பெட்டகங் களை இறக்கும் பணியை மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இணையமைச்சர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மன்சுகி மாண்டவி, முதல்வர் கே.பழனிசாமி ஆகியோர் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: தமிழக தொழில் வர்த்தகர்களுக்கு இன்றைய நாள் மிகவும் முக்கிய மானதாகும். இதுவரை தூத்துக்குடி யில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், சீனா போன்ற தூரகிழக்கு நாடுக ளுக்கு சரக்கு பெட்டகங்கள் கொழும்பு துறைமுகம் வழியாகவே அனுப்பப்பட்டன.

தற்போது, தூத்துக்குடி துறை முகத்தின் மிதவை ஆழம் 14 மீட்டராக அதிகரிக்கப்பட்டு, முக்கிய வழித்தட கப்பல்கள் வர வசதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தூரகிழக்கு நாடுகளுக்கு சரக்கு பெட்டகங்களை நேரடியாக அனுப்ப முடியும். ஒரு பெட்டகத்துக்கு 50 டாலர் வரை செலவு மிச்சமாகும். கொழும்பு துறைமுகத்தில் பெரிய கப்பலுக்காக காத்திருக்கும் நேரமும் மிச்சமாகும். வருங்காலத் தில் மிதவை ஆழத்தை 16.5 மீட்டராக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சரக்கு பெட்டக பரி மாற்று மையமாக தூத்துக்குடி மாறும்.

மத்திய அரசு கடந்த 4 ஆண்டு களில் தூத்துக்குடி துறைமுகத்தில் ரூ.1,500 கோடியில் பல்வேறு கட்டமைப்பு வசதிகளை செய்துள் ளது. திருப்பூர், கரூர் பகுதி ஜவுளி ஏற்றுமதியாளர்கள் பெரிதும் பயன் பெறுவர்.

மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருப்பதுபோல, தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத் திலும் 1,000 ஏக்கரில் தொழில் வளர்ச்சி பகுதியை (துறைமுகம் சார்ந்த சிறப்பு பொருளாதார மண்ட லம்) உருவாக்க திட்டமிடப்பட்டுள் ளது என்றார்.

தமிழக முதல்வர்

காணொலி காட்சி மூலம் முதல்வர் கே.பழனிச்சாமி பேசியது: தூரகிழக்கு நாடுகளுக்கு நேரடி யாக சரக்கு பெட்டக கப்பல் போக்கு வரத்து தொடங்கியதன் மூலம் தென் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி ஊக்கமடையும். தமிழகத்தின் ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும். இதற்காக மத்திய கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார்.

பொன்.ராதாகிருஷ்ணன்

மத்திய கப்பல் துறை இணை யமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:

தூத்துக்குடி துறைமுக வரலாற்றில் திருப்புமுனையாக இவ்விழா அமைந்துள்ளது. சரக்கு பெட்டகங்களை கொழும்பு கொண்டு செல்லாமல் நேரடியாக எந்த நாட்டுக்கு கொண்டு செல்ல வேண்டுமோ அங்கே கொண்டு செல்லலாம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x