Published : 13 Dec 2018 10:00 AM
Last Updated : 13 Dec 2018 10:00 AM

பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்களை தடுக்காத அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை:  தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை 

பாலில் கலப்படம் செய்யும் நிறு வனங்கள் மீது நடவடிக்கை எடுக் காத அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கடந்த ஆண்டு பகிரங்கமாக குற்றம் சாட்டியிருந் தார். இதுதொடர்பாக உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் ஏ.பி.சூர்யபிரகாசம் தொடர்ந்த பொது நல வழக்கில், பால் கலப்படம் தொடர்பாக வெளிப்படையான விசாரணையை சிபிஐ நடத்த உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது. பொது சுகாதாரத்துறை இயக்குநர் ஏன் ஆஜராகவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பி னர். அப்போது அரசு தரப் பில், உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையர் பி.அமுதா சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில், கடந்த 2011 முதல் 2018 வரை 32 மாவட்டங்களிலும் 1,273 பால் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டன. அதில் 289 மாதிரி கள் தரம் குறைவாக இருந்தன. இது தொடர்பாக 7 பேர் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 4 பேருக்கு தண்டனை விதிக்கப் பட்டது.

இதேபோல 659 பால் பொருட் களின் மாதிரிகளில், 24 மாதிரி கள் உட்கொள்ள தகுதியற்றவை யாகவும் 274 பொருட்கள் தரம் குறைந்தவையாகவும் இருந் தன. இதுதொடர்பாக 22 பேர் மீது கிரிமினல் வழக்கு பதியப்பட்டு 5 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டு, ரூ. 1 லட்சத்து 7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதேபோல 158 பேர் மீது சிவில் வழக்கு பதியப் பட்டு 126 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டு ரூ. 21 லட்சத்து 29,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த அறிக்கையைப் படித்துப் பார்த்த நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். அப்போது மனுதார ரான வழக்கறிஞர் ஏ.பி.சூர்ய பிரகாசம் ஆஜராகி, “அரைகுறை யாக மாதிரிகள் எடுக்கப்பட்டு, நடவடிக்கையும் கண் துடைப்பாக எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

அதையடுத்து, 'பாலில் கலப் படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து அதை தடுக் காத அரசு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும். அப்போதுதான் இதுபோன்ற குற்றங்கள் குறையும்’ என நீதிபதிகள் எச்சரித்தனர்.

மேலும், இதுதொடர்பாக நிலு வையில் உள்ள வழக்குகளின் விசாரணையை துரிதப்படுத்த வேண்டும் என்றும் பால் கலப் படம் தொடர்பாக தமிழக அரசு இதுவரை எடுத்துள்ள நடவடிக்கை குறித்த விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டு விசாரணையை ஜன.21-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x