Published : 10 Dec 2018 09:49 AM
Last Updated : 10 Dec 2018 09:49 AM

உரிய பாதுகாப்பின்றி பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு நாள் ஊதியம் ரூ.85: துயரம் தீர நடவடிக்கை எடுக்கப்படுமா?

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், உடுமலை, வெள்ளகோவில், காங் கயம், பல்லடம் ஆகிய 5 நகராட்சி களும், திருப்பூர், அவிநாசி, பல்ல டம், ஊத்துக்குளி, பொங்கலூர், காங்கயம், வெள்ளகோவில், தாரா புரம், குண்டடம், மூலனூர், உடு மலைப், குடிமங்கலம், மடத்துக் குளம் ஆகிய 13 ஒன்றியங்களும் உள்ளன. 13 ஒன்றியங்களுக்கு உட்பட்டு 300-க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்ளன. மேற்படி ஊராட்சிகளில் அமைந்துள்ள குடியிருப்புகளில் இருந்து நாளொன்றுக்கு சுமார் 200 டன் வரை மக்கும், மக்காத குப்பை சேகரமாகின்றன.

இவற்றை அப்புறப்படுத்துவதில் துப்புரவுப் பணியாளர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. பணி ஒன்றாக இருந்தாலும், ஊதிய முரண்பாடுகள் இருப்பதால் பலரும் இப்பணிக்கு முன்வர மறுப்பதாகவும், பல ஊராட்சிகளில் பல நாட்களுக்கு ஒரு முறையே குப்பை அகற்றும் பணி நடைபெறு வதாகவும் புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து துப்புரவுத் தொழிலா ளர்கள் கூறும்போது, ‘அனைத்து குடியிருப்புகளிலும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். முறையான பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி, உடலுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும் சூழலில் பணிபுரிந்து வருகிறோம். அனைத்து உள்ளாட்சி களிலும் பணிச்சூழல் ஒன்றுதான். ஆனால் மாநகராட்சி, நகராட்சிகளில் பணிபுரிவோருக்கு அதிகமாகவும், கிராம ஊராட்சிகளில் பணிபுரி வோருக்கு குறைந்தபட்சமாகவும் ஊதியம் வழங்கப்படுகிறது.

நகராட்சிகளில் நாளொன்றுக்கு ரூ.390, கிராம ஊராட்சிகளில் ரூ.85 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த முரண்பாட்டை களைய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பல ஆண்டுகளாக இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்றனர்.

உள்ளாட்சிகளின் தனி அலுவலர் கள் கூறும்போது, ‘தமிழகம் முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பெரும்பாலான துப்புரவுத் தொழிலாளர்கள், தனியார் மூலமாக ஒப்பந்த தொழி லாளர்களாக பணிபுரிகின்றனர். ஊராட்சிகளில் மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப 5 முதல் 15 பேர் வரை பணிபுரிகின்றனர். மாவட்டம் முழுவதும் ஊராட்சிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர்.

முன்னர், தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் இணைக் கப்பட்டு, அதற்கான ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.224 வழங்கப்பட் டது. ஆனால், தற்போது தூய்மை காவலர்களாக நியமிக்கப்பட்டு ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. நகராட்சிகளில் பணிபுரிவோருக்கு நாள் ஒன்றுக்கு ரூ.383 ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் இ.எஸ்.ஐ., இ.பி.எஃப்., காப்பீடு, ஒப்பந்ததாரரின் கமிஷன்போக ரூ.340 வழங்கப்படுகிறது.

கிராம ஊராட்சிகளில் நிரந்தர துப்புரவுப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.6 ஆயிரம் வழங்கப் படுகிறது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ‘தூய்மைக் காவலர்கள்’ என்று அழைக்கப்படும் துப்புரவுத் தொழிலாளர்களுக்கு, நாள் ஒன்றுக்கு ரூ.85 வீதம் வழங்கப்படுகிறது. காலை 7 முதல் மதியம் 2 மணி வரை பணிபுரிய வேண்டும். உழைப்புக்கான ஊதியம் வழங்க வேண்டும்.

மாவட்ட ஆட்சியரின் தலைமை யிலான குழுதான் ஊதியத்தை நிர்ணயம் செய்கிறது. எனவே மாவட்ட நிர்வாகம் தான் துப்புரவுத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு குறித்து நடவடிக்கை எடுக்க முடியும். தனி அலுவலர்களால் எந்த முடிவும் எடுக்க முடியாது' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x