Last Updated : 10 Dec, 2018 09:41 AM

 

Published : 10 Dec 2018 09:41 AM
Last Updated : 10 Dec 2018 09:41 AM

திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில்  மகப்பேறு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு கட்டுமான பணி தீவிரம் 

திருவள்ளூர் அரசு தலைமை மருத்து வமனையில் புதிய மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பிரிவு வளாகக் கட்டுமானப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருவள்ளூர் ஜவஹர்லால் நேரு சாலையில் சுமார் 10 ஏக்கர் பரப் பளவில் அமைந்துள்ளது திருவள் ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்து வமனை. இங்கு மகப்பேறு மற்றும் குழந்தைகள் நலப் பிரிவு, விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, கண், காது பிரிவு, எலும்பு முறிவு பிரிவு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட பிரிவுகள் செயல்படுகின்றன.

இம்மருத்துவமனையில் தற்போது, புதிய ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங் குழந்தைகள் சிறப்பு பிரிவு கட்டு மானப் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து, மருத்துவமனை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நாள்தோறும் 2,500-க்கும் மேற் பட்டோர் புறநோயாளிகளாகவும், 300 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் உள்ள மகப் பேறு பிரிவில் நடக்கும் பிரசவங் களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஆகவே, திருவள்ளூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் புதிதாக ஒருங் கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பிரிவு அமைக்கும் பணி கடந்த மார்ச் மாதம் துவங்கப்பட்டு, தீவிரமாக நடந்து வருகிறது.

தேசிய சுகாதார திட்டத்தின் கீழ், ரூ.18 கோடி செலவில் 1,100 ச.மீ. பரப்பளவில் 6 தளங்களுடன் அமைய உள்ள இந்த ஒருங்கி ணைந்த மகப்பேறு, பச்சிளங்குழந் தைகள் சிறப்பு பிரிவு வளாகத் தில் பேறுகால தீவிர சிகிச்சைப் பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பரா மரிப்பு பிரிவு, சிறப்பு தடுப்பூசிபிரிவு, குடும்ப நலப் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கு, ஸ்கேன் அறை உள்ளிட்டவை செயல்பட உள்ளன.

இந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் சிறப்பு பிரிவு அமைக்கும் பணியில் தற்போது 40 சதவீதப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. மீதமுள்ள பணிகள் வரும் 2019 ஆகஸ்ட் இறுதிக்குள் முடிவுக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x