Published : 10 Dec 2018 09:38 AM
Last Updated : 10 Dec 2018 09:38 AM

காய்ந்த நெற்பயிர்கள் குறித்து கணக்கெடுக்க முடிவு: இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து புகைப்படங்களை சேகரிக்கவும் திட்டம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் வறட்சி யால் பாதிக்கப்பட்ட விவ சாயிகளுக்குக் காப்பீட்டு நிறுவனம் மூலம், இழப்பீடு பெற்றுத் தர விவ சாயத் துறை திட்டமிட்டுள்ளது. இதற் காகக் கணக்கெடுப்பு நடத்துவது டன் தேவை ஏற்பட்டால் இஸ்ரோ நிறுவனத்திடம் இருந்து தகவல் களை கேட்டுப் பெறவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் அளவில் விவசாயி கள் நெற்பயிர்களை பயிரிட்டுள்ள னர். ஆனால் பருவமழை தவறிய தால், இந்த நெற்பயிர்களைக் காப் பாற்றுவதில் விவசாயிகளுக்கு பெரும் சவால் ஏற்பட்டுள்ளது. ஆழ் துளைக் கிணறு மூலம் பாசனம் செய் பவர்கள் தாங்கள் பயிர்செய்த நிலங்களில் ஒரு பகுதியையாவது காப்பாற்றிக் கொண்டனர். ஆனால், ஏரிப் பாசனத்தை நம்பிப் பயிர்செய் தவர்களின் நெற்பயிர்கள் பல்வேறு இடங்களில் மொத்தமாகக் கருகி யுள்ளன. இந்த வறட்சி காரணமாக மாவட்டம் முழுவதும் சுமார் 35 ஆயிரம் ஏக்கர் அளவுக்கு நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று விவசாயச் சங்கங்கள் தெரி விக்கின்றன. குறிப்பாக பரந்தூர் குறு வட்டப் பகுதியில் உள்ள பல கிராமங்களில் நெற்பயிர்கள் முற் றிலும் பாதிக்கப்பட்டு மாடுகளை மேயவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பயிர் செய்துள்ள 50 ஆயிரம் ஏக்கரில் 32 ஆயிரத்து 262 ஏக்கர் நிலங்கள் காப்பீட்டு நிறுவனம் மூலம் காப் பீடு செய்யப்பட்டுள்ளன. காஞ்சி புரம் ஒன்றியத்தில் 1,487 ஏக்கர், வாலாஜாபாத் - 10,596, உத்திர மேரூர் - 1,296, காட்டாங்குளத்தூர் - 480, திருக்கழுகுன்றம் - 1,578, திருப்போரூர் - 677, மதுராந்தகம் - 2,060, அச்சிறுப்பாக்கம் - 1,748, சித்தாமூர் - 1,569, பவுஞ்சூர் - 824, ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்தில் - 9,124, படப்பை - 697, சிட்லப் பாக்கம் - 122 ஏக்கர் என மொத்தம் 32 ஆயிரத்து 262 ஏக்கர் நிலங் களுக்கு விவசாயிகள் நெற்பயிர் களுக்காகக் காப்பீடு செய்துள் ளனர். இதற்காக ஏக்கர் ஒன்றுக்கு ரூ.398 வீதம் பணம் செலுத்தியுள் ளனர். மத்திய, மாநில அரசுகளும் இதே அளவு தொகையை விவசாயி களுக்காக செலுத்தியுள்ளன. இதில் 6,914 விசாயிகள் 16 ஆயிரத்து 177 ஏக்கரில் கூட்டுறவு நிறுவனங்களில் விவசாயக் கடன் பெற்றே பயிர் செய்துள்ளனர். இவர்களுக்குக் கடன் கொடுக்கும்போதே காப்பீட்டு நிறுவனத்துக்கான காப்பீட்டுத் தொகை பிடிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ள விவசாயிகள் தனியாக காப்பீடு செலுத்தியுள்ளனர். கடன் வாங்கி விவசாயம் செய்த பலருக் கும் கடனைத் திரும்பச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

விவசாயிகள் காப்பீட்டுத் தொகை செலுத்துவதற்கான காலம் நவம்பர் 31-ம் தேதியுடன் முடி வடைந்த நிலையில், இவர்கள் செலுத்திய காப்பீட்டுத் தொகைக்கு இன்னும் ரசீது வந்து சேரவில்லை. இதனால் காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீட்டு உரிமை கோருவதில் சிக்கல் இருக்குமோ என்ற அச்சமும் விவசாயிகள் மத்தியில் உள்ளது.

இது குறித்து தமிழ்நாடு விசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலர் கே.நேருவிடம் கேட்டபோது, "காப் பீடு செலுத்திய பலருக்கு இன்னும் ரசீது வரவில்லை. மாவட்டம் முழுவ தும் 35 ஆயிரம் ஏக்கருக்கும் அதிக மான விவசாய நிலங்கள் தண்ணீர் இல்லாமல் வறண்டுவிட்டன. காப்பீடு செய்துள்ள விவசாயி களுக்கு பணம் செலுத்திய தேதியை கணக்கில் கொண்டு அதற்குப் பின் காய்ந்த நிலங்கள் அனைத்துக்கும் இழப்பீடு பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

மாவட்ட ஆட்சியரின் விவசாயப் பிரிவு நேர்முக உதவியாளர் பானுமதியிடம் கேட்டபோது, "காப் பீட்டு நிறுவனத்தின் விதிப்படி பயிர் செய்த குறிப்பிட்ட காலத்துக்குள் காப்பீட்டுத் தொகை செலுத்தி இருந்தால், அவர்களுக்கு இழப்பீடு கிடைக்கும். ஒரு கிராமத்தில் ஒன்றி ரண்டு விவசாயிகள் மட்டும் பாதிக் கப்பட்டால் அதற்கு இழப்பீடு கிடைக் காது. ஒரு கிராமத்தில் பயிர் செய்யப் பட்ட நிலங்களில் 75 சதவீதம் காய்ந்து இருந்தால் மட்டுமே இழப்பீடு கிடைக்கும். வறட்சியால் பாதிக்கப் பட்ட பகுதிகளைக் கணக்கெடுக்க அனுமதி கோரி விவசாயத்துறை இயக்குநர் அலுவலகத்துக்கு கடி தம் அனுப்பியுள்ளோம். கணக் கெடுப்பு தொடர்பாக காப்பீட்டு நிறுவனங்கள் சந்தேகங்களை எழுப் பினால், இஸ்ரோவிடம் இருந்து விவசாயிகள் பயிர் செய்தது, பின் னர் காய்ந்தது தொடர்பான புகைப் படங்களைக் கூட பெற்றுத்தரத் தயாராக உள்ளோம். ஏற்கெனவே இதுபோல் படங்களைப் பெற்று விவசாயிகளுக்கு இழப்பீடு பெற்றுத் தந்துள்ளோம்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x