Last Updated : 10 Dec, 2018 09:25 AM

 

Published : 10 Dec 2018 09:25 AM
Last Updated : 10 Dec 2018 09:25 AM

புயலால் பாதித்த தென்னை விவசாயிகளை பாதுகாக்க சிறப்பு திட்டம்: முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் யோசனை

தமிழகத்தில் புயலால் பாதிக்கப் பட்டுள்ள தென்னை விவசாயிகளை பாதுகாக்கவும், தென்னை மரங் களை வளர்த்தெடுக்கவும் மத்திய அரசுக்கு தமிழக முன்னாள் வேளாண்மை துறை அமைச்சர் யோசனை தெரிவித்துள்ளார்.

கஜா புயலால் டெல்டா மாவட் டங்களில் பல லட்சக்கணக்கான தென்னை மரங்கள் முறிந்து சாய்ந்தன. இதனால், தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட தென்னை மரங் களுக்கு அரசு அறிவித்த நிவா ரணம், அவற்றை அப்புறப்படுத்தக் கூடப்போதாது என்பதால், நிவாரணத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும், மத்திய, மாநில அரசுகள் சிறப்புத் திட்டத்தின் வாயிலாக உதவிக்கரம் நீட்டினால்தான், தென்னை விவசாயத்தை உயிர்ப் பிக்க முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து முன்னாள் தமிழக வேளாண் துறை அமைச்சர் கு.ப.கிருஷ்ணன், ‘இந்து தமிழ்' நாளிதழிடம் கூறியது:

விவசாயிகளுக்கு சம்பளம்

‘‘ஒரு தென்னங்கன்று காய்ப்புக்கு வர 7 ஆண்டுகள் ஆகும். இந்த காலகட்டத்தில் விவசாயிகளுக்கு எவ்விதமான வருமானமும் கிடைக்காது. எனவே, புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தென்னங்கன்றுகளை வழங்கி, அவற்றை பராமரிப்பதற்கு தேவை யான இடுபொருட்களுடன், விவ சாயிகளுக்கு சம்பளம், உணவுப் பொருட்களையும் அரசு கொடுத் தால்தான் தென்னை விவசாயத் தையும், விவசாயிகளையும் பாது காக்க முடியும்.

கடந்த 1985-ம் ஆண்டில் மகா ராஷ்டிராவில் தரிசாக இருந்த அரசு மற்றும் தனியாருக்கு சொந்த மான 7 ஆயிரம் ஏக்கரில், நிலத் தின் உரிமையாளர்கள் உதவி யுடன் மா, மாதுளை, ஆரஞ்சு போன்ற பழக்கன்றுகள் சாகுபடி செய்யப்பட்டன. இதைப் பராமரிப் பதற்காக தேசிய வேலை உறுதித் திட்டம் (NREP) மூலம் வேலை வாய்ப்பும் அளிக்கப்பட்டது. தினசரி நபருக்கு ரூ.2 சம்பளம் அளிக்கப்பட்டது. குடும்பத்தினரில் ஒரு நபருக்கு தினசரி 400 கிராம் வீதம் அரிசி அல்லது கோதுமை, 100 மில்லி லிட்டர் எண்ணெய், 80 கிராம் பருப்பு வீதம் கணக்கிட்டு ரேஷன் கடைகள் மூலம் வழங் கப்பட்டது.

தொடர்ந்து, 5 ஆண்டுகள் செயல்படுத்தப்பட்ட இந்த திட் டம் அந்த மாநிலத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தாக்கமானது இந்தியாவில் மா, மாதுளை உற்பத்தியில் மகாராஷ் டிரா மாநிலம் முன்னிலை பெற்றது. இந்தப் பகுதியை நான் அமைச்சராக இருந்தபோது நேரில் சென்று பார்த்துள்ளேன்.

இதேபோல, தமிழகத்தில் சோலையாக காட்சியளித்த பகுதி களெல்லாம் புயலால் பாதிக் கப்பட்டு தரிசுபோல உள்ளதால், தென்னை விவசாயம் மற்றும் விவசாயிகளைப் பாதுகாக்க மகா ராஷ்டிரா மாநிலத்தில் செயல் படுத்தியது போன்ற சிறப்புத் திட் டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும். அதற்கு மாநில அரசு முயற்சிக்க வேண்டும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x