Published : 10 Dec 2018 08:39 AM
Last Updated : 10 Dec 2018 08:39 AM

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் திருப்பூரில் மகளிர் திருவிழா: விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி பயணியுங்கள்- திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கயல்விழி அறிவுறுத்தல்

தைரியம், விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி பெண்கள் பய ணிக்க வேண்டும் என்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி கூறினார்.

`இந்து தமிழ்’ நாளிதழின் `பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் மகளிர் திருவிழா திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை கொங்கு வேளாளர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அ.கயல்விழி பேசியதாவது:

மனித வாழ்வில் மகத்தான சக்தி பெண். இயக்குவிக்கப்படும் சக்தியாக மட்டுமின்றி, இயக்கும் சக்தியாகவும் இருப்பது பெண். சங்க காலம் முதலே பெண்கள் திறம்படச் செயல்பட்டுள்ளனர். வீட்டை விட்டு வெளியே செல்லவே தடை விதிக்கப்பட்ட காலங்களிலும் சாதித்தவர்கள் பெண்கள். ஒவ்வோர் ஆணின் வெற்றிக்கும் உந்துசக்தி யாக இருப்பதும் பெண்ணே.

குழந்தைகளுக்கு பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொடுப் பதுடன், ஆரோக்கியமாகவும் வளர்ப்பவர்கள் பெண்கள். அவர் களது திறமைகளை வெளிக் கொணர்வதில் பெண்களுக்கே முக் கிய பங்கு உள்ளது. இதன்மூலம் நல்ல வீட்டை உருவாக்குவதுடன், சிறந்த எதிர்காலத்தையும் உருவாக் குகிறார்கள். சமுதாய முன்னேற்றத் துக்கு முக்கிய காரணமே பெண்கள் தான்.

பாலின வேறுபாடு கூடாது

புறம்பேசுபவர்கள், மன உளைச் சலைத் தருபவர்களைத் தன்னம் பிக்கையுடன் எதிர்கொண்டு, தைரியம், விடாமுயற்சியுடன் வெற்றியை நோக்கி பெண்கள் பயணிக்க வேண்டும். குழந்தைகள் வளர்ப்பில் பாலின வேறுபாட்டைக் காட்டக்கூடாது. பெண் குழந்தை களுக்கு பாலியல் சீண்டல்கள், தொந்தரவுகள் இருந்தால், தயக்க மின்றி பெற்றோரிடம் கூறும் மன நிலையை உருவாக்க வேண்டும். அதேபோல, பெண் குழந்தை களுக்கு தொல்லை கொடுப்பவர் கள் குறித்து தயக்கமின்றி காவல் துறையில் புகார் கொடுக்க வேண்டும். அப்போதுதான், குற்றம் செய்தவர்கள் மேலும் குற்றங்கள் செய்வதைத் தடுக்க முடியும். 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளில், அதிகபட்சமாக மரணதண்டனை விதிக்கக் கூட சட்டத்தில் இடமுள்ளது.

இதேபோல, ஈவ்டீசிங், குழந் தைத் திருமணம், வரதட்சணைக் கொடுமை உள்ளிட்டவை தொடர் பாகவும் தயக்கமின்றி புகார்கள் அளிக்க வேண்டும். பெண்களைப் பாதுகாக்க காவல் துறை தயாராக உள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் காவல் துறை திறம்படச் செயலாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

`நிமிர்வு’ கலைக் குழுவின் பறை இசை, இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தும் `சமம்’ என்ற நாடகம், திருப்பூர் பவளக்கொடி கும்மியாட்டக் குழுவின் பவளக்கொடி மற்றும் வள்ளி கும்மி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவன முதுநிலை மேலாளர் ரெஜினா ஜார்ஜ், எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சேமிப்பு குறித்து விளக்கினார்.

மாணவிகளின் பேச்சரங்கு

திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி சார்பில் `சேமிப்பில் சிறந்தவர்கள் ஆண்களா? பெண்களா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சரங்கை, தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் சுதாதேவி தொடங்கி வைத்தார். இதில், சேமிப்பில் சிறந்தவர்கள் ஆண்கள் என்ற தலைப்பில் மாணவி ஏ.கவிப்பிரியா, பெண்கள் என்ற தலைப்பில் மாணவி எஸ்.கோகிலா ஆகியோர் பேசினர். மாணவி தீபிகா நடுவராகச் செயல்பட்டார்.

விழாவில், கொங்கு வேளாளர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி துணைத் தலைவர் கீதாஞ்சலி கோவிந்தப்பன், செயலர் ஓ.கே.கந்தசாமி, முன்னாள் துணைத் தலைவர் கிரி ரங்கசாமி, முதல்வர் ஜே.சுமதி, `இந்து தமிழ்’ விநியோகப் பிரிவுத் தலைவர் டி.ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பிற்பகலில் உடனடிப் போட்டி, திடீர் போட்டி, கோலப்போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, ஏராளமான பரிசுகள் வழங்கப்பட் டன. பிற்பகல் நிகழ்ச்சிகளைச் சின்னத்திரை தொகுப்பாளினி தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.

இணைந்து வழங்கியோர்

இந்த நிகழ்ச்சியை, இந்தியன் ஆயில் நிறுவனம், பொன்வண்டு சோப், செளபாக்யா கிச்சன் அப்ளை யன்சஸ், பொன்மணி வெட்கிரைண் டர், ஆர்.கே.ஜி. நெய், சக்தி மசாலா, மில்கா ஒண்டர் கேக், பனானாஸ் சிலைஸ், ஜூவல் ஒன், பாரத் எலெக்ட் ரானிக்ஸ் அன்ட் அப்ளையன்சஸ், ரமணி நிசான், பூமர், சாவித்ரி போட்டோ ஹவுஸ் மற்றும் சூர்யா கேட்டரிங் உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து வழங்கின.

தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும்

திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனை மனநல மருத்துவ அலுவலர் ஆர்.சுகன்யாதேவி பேசும்போது, ‘‘ஆரோக்கியமான மனநிலை, சிந்தனை, செயலாற்றல், முடிவெடுக்கும் திறன், நினைவாற்றலில் ஏற்படும் பாதிப்புகளும் மனநலப் பாதிப்புகளாகவே கருதப்படுகின்றன.

உலக மக்கள் தொகையில் 3 சதவீதம்பேர் தீவிர மன நோயாலும், 20 சதவீதம் பேர் லேசான மனநோயாலும் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச சுகாதார நிறுவன கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.

சமூகக் காரணிகளால் மன அழுத்தம் ஏற்படுவதைத் தவிர்க்க, சூழலைச் சந்திக்கும் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். குடும்பத்தாருடன் போதிய அளவு நேரத்தை செலவிடுதல், உடற்பயிற்சி, உணவுப் பழக்கம், நல்ல தூக்கம், பிறருக்கு உதவும் மனப்பக்குவத்தை வளர்த்துக் கொள்ளுதல் உள்ளிட்டவை மன அழுத்தத்தைப் போக்க உதவும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x