Published : 10 Dec 2018 08:37 AM
Last Updated : 10 Dec 2018 08:37 AM

ரத்து செய்யப்படும் ரயில் டிக்கெட்களை காத்திருப்போர் பட்டியல் பயணிகளுக்கு உடனடியாக அளிக்க ஜனவரியில் புதிய திட்டம்: டிக்கெட் பரிசோதகர்களுக்கு கருவிகள் அளித்து பயிற்சி 

ரத்து செய்யப்படும் டிக்கெட்களை ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கு உடனடியாக அளிக்க, வரும் ஜனவரி முதல் புது திட்டத்தை ரயில்வே அறிமுகம் செய்யவுள்ளது. இதற்காக டிக்கெட் பரிசோதர்களுக்கு கையடக்க கருவிகள் (ஹேண்ட்ஹெல்ட் டெர்மினல்) வழங்கி தற்போது பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

வெளியூர் பயணத்துக்கு பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை முதலில் தேர்வு செய்கின்றனர். தொடர் விடுமுறை மற்றும் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை நாட்களில் சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊருக்குச் செல்வார்கள்.

தற்போதுள்ள நிலவரப்படி சுமார் 70 சதவீத மக்கள் ஐஆர்சிடிசி இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். மீதமுள்ளோர் முன்பதிவு மையங் களில் முன்பதிவு செய்கின்றனர். கடைசி நேரம் வரையில் டிக்கெட் உறுதியாகாமல் ஆர்ஏசி அல்லது காத்திருப்போர் பட்டியலில் பயணிகள் இருப்பார்கள்.

உடனடியாக அளிக்கலாம்

ரயிலில் பயணம் செய்ய ஆன் லைனில் டிக்கெட் முன்பதிவு செய்து, அது காத்திருப்போர் பட்டி யலில் (வெயிட்டிங் லிஸ்ட்) இருந்தால் அவர்கள் ரயிலில் பய ணம் செய்ய முடியாது. கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட்கள் ஆர்ஏசி, காத்திருப் போர் பட்டியலில் இருப்பவர் களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். இந்த ஒதுக்கீடு செய்வதிலும் தாமதம் ஏற்படுவதால், குடும்பத் தோடு பயணிக்க திட்டமிட்டு இருப் பவர்கள் அவதிப்படுவார்கள்.

கடைசி நேரத்தில் ரத்து செய் யப்படும் இந்த டிக்கெட் குறித்த விபரங்கள் டிக்கெட் பரிசோதக ருக்கு உடனடியாகத் தெரியாது. டிக்கெட் பரிசோதகர்கள் பரிசோ தனை செய்த பிறகு, வராத பய ணிகளின் எண்ணிக்கை கணக் கிடப்படும். அதன்பிறகே, ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டியலில் உள்ள வருக்கு காலியாகவுள்ள இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்நிலையில், கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படும் டிக்கெட் குறித்த விபரங்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு கிடைக் கும் வகையில் ரயில்வே புதிய மின்னணு கையடக்க கருவிகளை வரும் ஜனவரி முதல் வழங்க வுள்ளது. அதன்படி, பயணிகள் டிக்கெட் ரத்து செய்தவுடனே, அந்த இடங்களை டிக்கெட் பரி சோதகர்கள் உடனடியாகப் பார்க்க முடியும். அதன் அடிப்படையில், காலியாகவுள்ள இடங்களில் காத் திருப்போர் பட்டியலில் உள்ளோ ருக்கும் உடனடியாக ஒதுக்கிக் கொடுக்கலாம்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

தற்போதுள்ள நடைமுறைப்படி டிக்கெட் பரிசோதகர்கள் ரயிலில் உள்ள பயணிகளின் டிக்கெட்களை பரிசோதனை செய்த பிறகே, பயணம் செய்யாத பயணிகளின் பட்டியலை வழங்குவார். அதன் பிறகு, காலியான இடங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் பயணிகளுக்கு இடங் களை ஒதுக்கீடு செய்வார். இதனால், காலதாமதம் ஏற்படும்.

500 கருவிகள் வழங்கி பயிற்சி

இந்நிலையில், டிக்கெட் பரிசோதகர்களுக்கு மின்னணு கையடக்க கருவிகளை (ஹேண்ட் ஹெல்ட் டெர்மினல்) வழங்கி ஜனவரி முதல் புதிய திட்டத்தை கொண்டுவரவுள்ளது. அதன்படி, டிக்கெட் பரிசோதகர்கள் கையடக்க கருவிகள் மூலம் காலியாகவுள்ள இடங்களின் அறிவிப்புகளை உடனுக்குடன் பெற முடியும்.

இதற்காக முதல்கட்டமாக 500 கையடக்க கருவிகள் வழங் கப்பட்டு, டிக்கெட் பரிசோதகர் களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இதனால், காத்திருப் போர் பட்டியல், ஆர்ஏசி பட்டியல் பயணிகளுக்கு உடனடியாக டிக்கெட் ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும், இது தவிர்த்து, காலியாகவுள்ள இடங்கள் கரன்ட் ரிசர்வேஷன் மூலம் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும், ரயில் டிக்கெட் ரத்துக்கான தகவல் உடனுக்குடன் செல்வதால், ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கான கட்டணமும் காலதாமதம் இன்றி விரைவில் கிடைக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x