Published : 10 Dec 2018 08:15 AM
Last Updated : 10 Dec 2018 08:15 AM

‘சிறந்த நாடாளுமன்ற உறுப்பினர்’: திமுக எம்.பி. கனிமொழிக்கு விருது- வெங்கய்ய நாயுடு 13-ம் தேதி வழங்குகிறார் 

இந்த ஆண்டின் சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கான விருது, திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழிக்கு வழங்கப்படுகிறது.

இதுகுறித்து பிரபல செய்தி நிறுவனமான ‘லோக்மட்’ நிறுவனத் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜய் தர்தா தெரிவித்ததாவது:

‘லோக்மட்’ செய்தி நிறுவனம் சார்பில் ‘நாடாளுமன்ற விருதுகள்’ கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. 2-வது ஆண்டாக இந்த ஆண்டும் விருது வழங்கப்படுகிறன. இந்த ஆண்டு சிறந்த பெண் நாடாளுமன்ற உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த கனிமொழி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 13 -ம் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடக்கும் விழாவில் இந்த விருதை கனிமொழிக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு வழங்குகிறார்.

நாடாளுமன்றத்தில் கனிமொழி கடந்த 10 ஆண்டுகளாக சிறப் பாக பங்காற்றியதற்காகவும், ஜன நாயகத்தின் மதிப்பீடுகள், கொள் கைகளுக்கு வலு சேர்த்ததற்காக வும் அவருக்கு இந்த விருது வழங் கப்படுகிறது. அவரது நாடாளுமன்ற செயல்பாடுகள் மற்றவர்களுக்கு ஊக்கமாகவும், ஜனநாயகத்தை வலுப்படுத்த உந்து சக்தியாகவும் திகழ்ந்து ஜனநாயகத்துக்கான நேர்மறையான பங்களிப்பை முன் னெடுத்துச் செல்கின்றன. கனி மொழிக்கு இந்த விருது வழங்கு வதன் மூலம் நாடாளுமன்ற ஜன நாயகத்தை வலுப்படுத்த வாய்ப்பு கிடைத்ததற்கு ‘லோக் மட்’ செய்தி நிறுவனம் மகிழ்ச்சி கொள்கிறது.

இவ்வாறு விஜய் தர்தா கூறினார்.

‘லோக்மட்’ செய்தி நிறுவனம் வழங்கும் நாடாளுமன்ற விருதுகளை 10 பேர் கொண்ட மூத்த நாடாளுமன்றவாதிகள் குழு தேர்ந்தெடுத்தது. முரளி மனோகர் ஜோஷியை தலைவராகக் கொண்ட விருதுகள் தெரிவுக் குழுவில், பரூக் அப்துல்லா, சவுகதா ராய், பிரஃபுல் பட்டேல், டி.ராஜா, சுபாஷ் காஷ்யப், ஹெச்.கே. துவா, ராஜத் சர்மா, ஹரிஷ் குப்தா, ‘லோக்மட்’ செய்தி நிறுவனத் தலைவர் விஜய் தர்தா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x