Published : 09 Dec 2018 10:24 AM
Last Updated : 09 Dec 2018 10:24 AM

உண்டியல் பணத்தை கஜா புயல் நிவாரணத்துக்கு வழங்கிய சிறுமி: அமைச்சர் பாராட்டு

உண்டியலில் சேமித்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரண நிதிக்கு வழங்கிய 2-ம் வகுப்பு மாணவியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டினார்.

சத்தியமங்கலத்தைச் சேர்ந்த வர்கள் பாலு, கவிதா தம்பதி. இவர்களது மகள் தீக்ஷா (7), தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வருகிறார். இதயக்கோளாறு மற்றும் நுரையீரல் பாதிப்பு காரணமாக சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒரு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி யுள்ளனர்.

இச்சூழலில் சிறுமி தீக்ஷா தான் உண்டியலில் சேமித்து வைத்திருந்த 950 ரூபாயை கஜா புயல் நிவாரண நிதியாக சத்தியமங்கலத்திற்கு வந்திருந்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் வழங்கினார். சிறுமியை பாராட்டிய அமைச்சர் செங்கோட்டையன், அவரது மருத்துவ சிகிச்சைக்குத் தேவையான செலவை அரசே ஏற்றுக்கொள்ளும், என அறிவித் தார். இச்சம்பவம் விழாவில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x