Published : 09 Dec 2018 10:00 AM
Last Updated : 09 Dec 2018 10:00 AM

பறவைகள் இல்லாமல் வெறிச்சோடிய வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் திறக்கப்பட்டது

வேடந்தாங்கல் ஏரியில் தண்ணீ ரும், பறவைகளும் இல்லாததால் பறவைகள் சரணாலயம் ஆரா வாரம் இல்லாமல் திறக்கப்பட்டு விட்டது. மக்கள், சரணாலயத்துக்கு வந்து ஏமாறக் கூடாது என்பதால் திறப்பு குறித்து அறிவிப்புகள் கொடுக்கவில்லை என்று வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகத்தில் வேடந்தாங் கல் கிராமத்தில் உள்ள ஏரிக் குத் தென்மேற்கு பருவமழை யின்போது ஓரளவுக்கு தண்ணீர் வந்து, பறவைகள் வரத் தொடங்கி விடும். இதனால் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதங் களில் சரணாலயம் பொது மக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.

இந்த ஆண்டு நவம்பர் முடிந்து டிசம்பர் மாதம் தொடங்கியும் இதுவரை மழை இல்லை. இத னால், ஏரிக்குத் தண்ணீர் வரத்து இல்லை; இருந்த தண்ணீரும் காய்ந்துவிட்டது.

இதனால் வேடந்தாங்கல் ஏரிக் குப் பறவைகள் அதிக அளவில் வரவில்லை. சரணாலயத்தைத் திறப்பதற்கு மழையை எதிர் பார்த்துக் காத்திருந்த அதிகாரிகள், மழை பெய்யாததால், ஆரவாரம் இல்லாமல் கடந்த 6-ம் தேதி திறந்துவிட்டனர். இதுகுறித்த அறிவிப்புகள் ஏதும் வெளியிடப் படவில்லை.

இதுகுறித்து வேடந்தாங்கல் வனச்சரகர் சுப்பையாவிடம் கேட்ட போது, “மழை இல்லாததால் ஏரி யில் தண்ணீர் இல்லை. தற்போது சுமார் 1,500 பறவைகள் மட்டுமே உள்ளன. மழை பெய்தால்தான் பறவைகள் வரத்து அதிகரிக் கும். இல்லையேல் குறையும். சர ணாலயம் திறப்பு குறித்து அறிவிப்பு கொடுத்தால் மக்கள் வந்து பார்த்து விட்டு ஏமாந்து செல்வர். கடந்த ஆண்டு இந்த நேரத்தில் சரணால யம் திறந்திருந்ததால் பலர் சரணால யத்துக்கு வருகின்றனர்.

சரணாலயத்துக்கு வருபவர்கள் பூட்டியுள்ள சரணாலயத்தைப் பார்த்து திரும்பக் கூடாது, இருக் கும் பறவைகளையாவது பார்க் கட்டும் என்று திறந்து வைத் துள்ளோம்” என்றார்.மழை இல்லாததால் ஏரியில் தண்ணீர் இல்லை. தற்போது சுமார் 1,500 பறவைகளே உள்ளன. மழை பெய்தால்தான் பறவைகள் வரத்து அதிகரிக்கும். இல்லையேல் இதுவும் குறையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x