Published : 09 Dec 2018 09:58 AM
Last Updated : 09 Dec 2018 09:58 AM

ராமநாதபுரம் மருத்துவமனையில் சென்னை கைதி தப்பி ஓட்டம்: 4 காவலர்கள் சஸ்பெண்ட்

ராமநாதபுரம் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதிக் கப்பட்டிருந்த விசாரணைக் கைதி தப்பி ஓடினார். பாதுகாப்புப் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக 4 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் சனவேலியைச் சேர்ந்த ஜோதிடர் சங்கரபாண்டியன் வீட்டில் இளைஞர் ஒருவர் நேற்று முன் தினம் 13 பவுன் நகைகள், வெள்ளிக் கொலுசுகள், பணம் ஆகியவற்றை திருடிக் கொண்டு தப்பி ஓட முயன்றார். அவரை அப்பகுதி மக்கள் சரமாரியாக உதைத்து ஆர்.எஸ்.மங்கலம் போலீஸாரி டம் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அந்த இளைஞர் சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த சுப்ர மணியன் மகன் சந்தோஷ்குமார் எனத் தெரியவந்தது. அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந் ததால் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போலீ ஸார் சேர்த்தனர். நேற்று அதி காலை சந்தோஷ்குமார் கழிப்பறை செல்வதாகக் கூறிவிட்டு பாதுகாப்பு போலீஸாரை ஏமாற்றிவிட்டுத் தப்பினார்.

இவரைப் பிடிக்க திருவாடானை சரக கண்காணிப்பாளர் விஜய குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இதனி டையே பாதுகாப்புப் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக காவலர்கள் சுல்தான் இப்ரா ஹிம், காகிதமூர்த்தி, பால முருகன், முத்துராமலிங்கம் ஆகியோரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x