Last Updated : 09 Dec, 2018 09:56 AM

 

Published : 09 Dec 2018 09:56 AM
Last Updated : 09 Dec 2018 09:56 AM

ஊதியக் குறைப்பை கண்டித்து ‘ஸ்விக்கி’ நிறுவன ஊழியர்கள் போராட்டம்

‘ஸ்விக்கி’ நிறுவனத்தில் ஊதியம் குறைக்கப்பட்டதால், அதன் ஊழி யர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள் ளனர். இதுதொடர்பாக ‘ஸ்விக்கி’ நிர்வாகிகளுக்கும், ஊழியர்களுக் கும் இடையே நாளை பேச்சு வார்த்தை நடக்கவுள்ளது.

கொல்கத்தா ஐஐடியைச் சேர்ந்த மாணவர்களான ஹர்ஷா, நந்தன், ராகுல் ஆகியோர் சேர்ந்து 2014-ம் ஆண்டு ‘ஸ்விக்கி’ நிறு வனத்தை உருவாக்கினர். 25 ஹோட்டல்கள், 6 டோர் டெலிவரி நபர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிறுவனம், இன்று 40 ஆயிரம் ஹோட்டல்கள், 4 ஆயிரம் பணியா ளர்கள், 60 ஆயிரம் டோர் டெலிவரி நபர்களுடன், 19 பெரு நகரங்கள் உட்பட 54 நகரங் களில் செயல்படுகிறது.

செல்போனில் ‘ஸ்விக்கி’ செயலியை பதிவிறக்கம் செய்து செல்போன் மூலம், நமக்கு பிடித்த ஹோட்டல்களில் இருந்து, விரும் பிய உணவுகளை ஆர்டர் செய் தால், வீட்டுக்கே கொண்டுவந்து கொடுத்து விடுவார்கள். மேலும், 50 % வரை உணவின் விலையில் தள்ளுபடி கொடுக்கப்படுவதால், நாம் நேரில் சென்று வாங்குவதை விடவும், விலை குறைவாக கிடைக்கும்.

இந்நிலையில், ‘ஸ்விக்கி’ நிறுவ னத்துக்கும், உணவுப் பொருட் களை டோர் டெலிவரி செய்யும் நபர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக டோர் டெலிவரி செய்யும் நபர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:

உணவுப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் எங்களுக்கு மாதச் சம்பளம் கிடையாது. ஒரு டெலிவரி எடுத்தால் 40 ரூபாயும், ஒரே நேரத்தில் இரண்டு டெலிவரி எடுத்தால் கூடுதலாக 20 ரூபாயும் ‘ஸ்விக்கி’ நிறுவனம் சம்பளமாக வழங்கி வந்தது. அந்தச் சமயத் தில்தான் ஸ்விக்கியில் அதிகமான ஊழியர்கள் வேலைக்குச் சேர்ந் தனர். சில நாட்களுக்கு முன்னர், டெலிவரி கட்டணத்தை 40 ரூபா யில் இருந்து 35 ரூபாயாகவும், கூடுதலாக 20 ரூபாய் கொடுத்ததை 10 ரூபாயாகவும் குறைத்து விட்டனர். 7 கிலோ மீட்டர் தொலைவில் டெலிவரி செய்தால் ரூ.70 கொடுக்கப்பட்டது. அதை ரூ.45 ஆக குறைத்துவிட்டனர். நாங்கள் கூடுதல் சம்பளம் கேட்கவில்லை. ஏற்கெனவே வழங் கிய சம்பளத்தைதான் கேட்கிறோம்.

அதிகாலை 3 மணி வரை டோர் டெலிவரி செய்கிறோம். இதனால் இரவு நேரங்களில் வாகனங்களில் செல்லும்போது போலீஸ் கெடுபிடி அதிகமாக உள்ளது. இதுகுறித்து காவல் துறையுடன் ‘ஸ்விக்கி’ நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

இந்த கோரிக்கைகளை முன் வைத்துதான் போராட்டம் நடத்தி வருகிறோம். நாளை (10-ம் தேதி) நிறுவன நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துவதாக தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பேச்சுவார்த்தை நடத்த பெங் களூருவில் இருந்து நாளை தலைமை அலுவலக நிர்வாகி கள் வருவதாக சென்னை மண்டல நிர்வாகிகள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x