Last Updated : 09 Dec, 2018 09:45 AM

 

Published : 09 Dec 2018 09:45 AM
Last Updated : 09 Dec 2018 09:45 AM

புயலால் சாய்ந்து விழுந்த மரங்களை வெட்டி அகற்றுவதற்கு தென்னை விவசாயிகளுக்கு உதவும் வியாபாரிகள்: உணவுக்காக விற்பனைக்கு பயன்படும் குருத்துப் பகுதி

புதுக்கோட்டை மாவட்டத்தில் புய லால் முறிந்தும் சாய்ந்தும் உள்ள தென்னை மரங்களை அகற்றும் பணியில் தென்னை விவசாயி களுக்கு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் உதவி செய்து வருகின்றனர்.

கஜா புயலால் புதுக்கோட்டை மாவட்டத்தில் கீரமங்கலம், ராஜேந்திரபுரம், அறந்தாங்கி, ஆயிங்குடி, மேற்பனைக்காடு, வடகாடு, மாங்காடு, கொத்தமங்க லம், கருக்காகுறிச்சி உள்ளிட்ட பகுதியில் சுமார் 10 லட்சம் தென்னை மரங்கள் முறிந்தன. இதே தென்னந்தோப்பில் இடையிடையே இருந்த பலா, தேக்கு போன்ற மரங்களும் முறிந்திருப்பது விவசாயிகளை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

தென்னை மரங்களை துண்டு களாக வெட்டி அகற்றுவதற்கு கூடுதலாக செலவாகும் என்பதால், மரங்களை அகற்றுவதற்கு விவ சாயிகள் தயங்கி வருகின்றனர். இந்நிலையில் தருமபுரி, மதுரை, தேனி, கோவை போன்ற மாவட் டங்களைச் சேர்ந்த வியாபாரிகள் செங்கல் சூளைக்கு விறகுக்காக வும், பலகையாக அறுப்பதற்காக வும் மரங்களை இலவசமாக வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

தென்னை மரத்தின் நுனிப் பகுதியில் கிழங்கு போன்று இருக் கும் மடல் பகுதியை உணவுக்காக சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் வெட்டி எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

இவ்வாறு மரங்களை வெட்டி எடுத்துச் செல்வது வணிகத்துக் காகத்தான் என்றாலும், அது தங்க ளுக்கு உதவி செய்யும் விதமாக இருப்பதாக விவசாயிகள் கருது கின்றனர்.

இதுகுறித்து விவசாயி சுப்பிர மணியன் கூறியது: சுமார் 25 ஆண்டுகளைக் கடந்த மரங்கள் உறுதித் தன்மையுடன் இருப்பதால் அவற்றை பலகையாக அறுப்ப தற்காக தங்களின் தேவைக்கு ஏற்ற அளவில் அறுத்து துண்டுகளாக்கி வெளியூர் வியாபாரிகள் ஏற்றிச் செல்கின்றனர். வயது குறைந்த மரங்களை சுமார் 3 அடி உயர துண்டு களாக்கி, செங்கல் சூளையில் அடுப்பு எரிப்பதற்காக அவற்றை கொண்டு செல்கின்றனர்.

இவர்களில் பலர், விவசாயி களுக்கு பணம் எதுவும் கொடுப்ப தில்லை. ஒரு சிலர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக மரத்துக்கு ரூ.100 வீதம் கொடுக்கின்றனர். எனினும், பணம் கேட்டு விவசாயிகள் யாரும் வெளியூர் வியாபாரிகளை நிர்பந்திப்பதில்லை.

மரத் துண்டுகள் போக, அடியும், நுனியும் பயன்பாடின்றி தோட்டங்களில் கிடக்கின்றன. அதிலும்கூட, மரத்தின் குருத்துப் பகுதி மருத்துவ குணம் உள்ளது என்று கூறி ஸ்லைஸ் போல துண்டுகளாக்கி ரூ.10-க்கு 2, 3 என விற்கப்படுவதால், அவ்வாறு விற்பதற்காக என மதுரையைச் சேர்ந்த பலர் வந்து கடந்த சில தினங்களாக, மரத்தின் குருத்துப் பகுதியை வெட்டி எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு தென்னை மரங்களை வெளி மாவட்டங்களில் இருந்து வந்து வெட்டி எடுத்துச் செல்வதால், மரங்களை அகற்றும் பணியில் விவசாயிகளுக்கு சற்று சுமை குறைந்துள்ளது.

இதிலும்கூட, வெளியூர்களில் இருந்து வாகனங்களுடன் வரும் வியாபாரிகள் சாலையோரமாக உள்ள தோப்புகளில்தான் வெட்டி எடுத்துச் செல்கின்றனர். தொலை வில் உள்ள தோப்புகளுக்குள் வாகனம் செல்வது சிரமம் என்பதால் அவர்களும் வருவதில்லை என் றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x