Published : 09 Dec 2018 09:43 AM
Last Updated : 09 Dec 2018 09:43 AM

புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டுக் கொடுப்பது அரசின் பொறுப்பு: கவிஞர் வைரமுத்து கருத்து

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீட்டுக் கொடுக்கும் பொறுப்பை மத்திய, மாநில அரசுகள் ஏற்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து தெரி வித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் அருகே ‘கலப்பை மக்கள் இயக் கம்' என்ற அமைப்பின் சார்பில், புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 1008 ஆடுகள் வழங்கும் விழாவில் அவர் பேசியது:

புயலால் பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு விவசாயத்தைத் தவிர வேறு தொழில் தெரியாது. அந்நிய முதலீடு கிடைத்தால், அதை தமிழ்நாட்டுக்குக் கொண்டு வர தமிழக அரசு முயற்சி செய்ய வேண் டும். இதன் மூலம், பாதிக்கப்பட்ட பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்களைத் தொடங்க வேண் டும். மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி போதாது. எனவே, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள துயரத்தைக் கணக்கிட்டு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த துயரத்திலிருந்து மீண்டு எழுவோம் என பாதிக்கப்பட்ட மக்கள் சவால்விட்டு செயல்பட வேண்டும் என்றார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புயலால் பாதிக்கப்பட்ட ஒவ் வொரு குடும்பத்தையும் மீட்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பொறுப் பேற்க வேண்டும். மேலும், சேத மடைந்த விவசாய நிலத்தையும் மீட்டுக் கொடுக்க வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங் களை பேரிடர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.

டெல்டா மாவட்ட மக்கள் புய லால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கியிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல உள்ளது. எனவே, மத்திய அரசும் கர்நாடக அரசும் தங்களது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x