Published : 09 Dec 2018 08:45 AM
Last Updated : 09 Dec 2018 08:45 AM

ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றினால் அசெளகரியங்கள் ஏற்படும்: கருத்துகேட்பு கூட்டத்தில் போயஸ் தோட்டம் குடியிருப்புவாசிகள் எதிர்ப்பு- மாவட்ட நிர்வாகத்துக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று மெட்ராஸ் சமுதாயப் பணி பள்ளி பேராசிரியர் தகவல்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவது தொடர்பான கருத்து கேட்புக் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவித்து 108 மனுக்களை அப்பகுதி வீட்டு உரிமையாளர்கள் அளித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மறைந்தார். அவரது மறைவுக்குப்பின், கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 17-ம் தேதி, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லமான வேதா நிலை யம் நினைவு இல்லமாக மாற்றப் படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நினைவில் லம் தொடர்பாக சம்பந்தப்பட்ட போயஸ் தோட்டம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களிடம் கருத்து கேட்க மாவட்ட நிர்வாகம் முடிவெடுத்தது. இப்பணி, மெட்ராஸ் சமுதாயப் பணி பள்ளி (மெட்ராஸ் ஸ்கூல் ஆப் சோஷியல் ஒர்க்) வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், தேனாம்பேட்டை யில் உள்ள சமூக நலக் கூடத்தில், கருத்து கேட்புக் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. மெட்ராஸ் சமுதாயப் பணி பள்ளி பேராசிரியர் ஏ. ஏனோத் தலைமையில் நடந்த கருத்து கேட்புக் கூட்டத்தில், போயஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

அவர்களில் போயஸ் தோட் டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் பேசும்போது, ‘‘ஜெயலலிதா அந்தப் பகுதியில் பிரபலமானவர். அவரது நினைவில்லத்தை சிறிய பகுதியில் அமைப்பது சரியாக இருக்காது. தனியாரின் இல்லங் கள் அதிக அளவில் இருக்கும் பகுதியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வது அசவுகரி யமாக இருக்கும்.

சிறிய வியாபாரிகள் அங்கு கடை அமைப்பார்கள். இதனால், இங்குள்ள குடியிருப்புகளுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்சினை கள் உருவாகலாம். இங்கு யார் வருகிறார்கள் என்பதே தெரியாது. இப்பகுதிக்குள் வருவதும், வெளி யில் செல்வதும் சிக்கலுக்குள் ளாகும். அவரது சிறிய வீட்டில் நினைவு இல்லம் அமைப்பதை விட, அதிக அளவில் பொதுமக்கள் வந்து செல்லும் வகையில் பெரிய இடத்தில் நினைவு இல்லம் அமைக்க லாம். போயஸ் தோட்டத்தில் அவரது நினைவு இல்லத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 108 மனுக்கள் வழங்குகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அப் பகுதியைச் சேர்ந்த மற்றொரு வீட்டு உரிமையாளர், ‘‘ஜெயலலிதா ஒரு தேசிய தலைவர். நான் அவரது வீட்டின் அருகில் வசிக்கிறேன். அவரது நினைவு இல்லத்தை வேறு இடத்தில் அமைக்கலாம். இங்குள்ள வீடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்ப தற்கு முதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். போக்குவரத்து பாதிப்பும், பாதுகாப்புக்கு அச்சுறுத் தலும் ஏற்படும்’’ என்றார்.

இதற்கிடையில் சிலர், எந்தவித பாதிப்பும் இல்லாமல், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நினைவில்லம் அமைக்கலாம் என்று கருத்து தெரி வித்தனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக கருத்து கேட்பு நடத்திய ஏ.ஏனோத் கூறும்போது, ‘‘நினைவில்லம் தொடர்பாக 108 பேர் மனு அளித் துள்ளனர். அவர்கள் குறிப்பாக, நினைவில்லம் அமைத்தால், அதிக அளவில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படும், பாதுகாப்பு சிக்கல்கள் ஏற்படுவதுடன் பொதுமக்களை கட்டுப்படுத்துவதில் சிரமம் உரு வாகும் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், இங்கு கடைகள் உருவாகும், சாலையில் அமர்ந்து பொதுமக்கள் உணவு அருந்து வார்கள் இதனால் இப்பகுதியில் தூய்மைக் கேடு ஏற்படும் என்றும் தெரிவிக்கின்றனர். எங்களுக்கு அமைதியான நிலையில் போயஸ் தோட்டப்பகுதி இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போது நாங்கள் அவர்களின் கருத்துகளைக் கேட்டு பதிவு செய்துள்ளோம். வரும் 10-ம் தேதி (நாளை) இது தொடர்பான அறிக்கையை மாவட்ட நிர்வாகம் கேட்டுள்ளது. அன்று அறிக்கை அளிக்க உள்ளோம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x