Published : 09 Dec 2018 08:39 AM
Last Updated : 09 Dec 2018 08:39 AM

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்புக்காக ஒருங்கிணைந்த ‘181’ இலவச தொலைபேசி சேவை: முதல்வர் பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் பெண்களின் பாது காப்புக்காக காவல்துறை, மருத் துவம், சட்ட உதவிகளுடன் ஒருங் கிணைந்த ‘181’ இலவச தொலை பேசி சேவையை முதல்வர் கே.பழனிசாமி நாளை தொடங்கி வைக்க உள்ளார்.

பெண்களின் பாதுகாப்புக்காக ‘181’ இலவச தொலைபேசி எண்ணை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. டெல்லி, குஜராத் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் மட்டும் இந்த சேவை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில், தமிழகத்திலும் இந்த சேவையை விரிவுப்படுத்த முடிவு செய்யப்பட்டது.

சென்னை அம்பத்தூரில் உள்ள அம்மா கால் சென்டர் மையத்தின் ஒரு பகுதியில் ‘181 ’இலவச தொலை பேசி எண்ணுக்கான மையம் அமைக் கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நிர்வகிக்க 5 வழக்கறிஞர்கள், 5 மன நல ஆலோசகர்கள், ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர் பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இந்த மையத்துடன் காவல் துறை, மருத்துவம், சட்ட உதவிகள், கவுன்சிலிங் ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. பெண்களிடம் இருந்து வரும் அழைப்புகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேவையான உதவி கள் வழங்கப்பட உள்ளது. குடும்ப வன்முறை, வரதட்சனை கொடுமை, பாலியல் ரீதியாக பாதிக்கப்படுவது, உடல், மன நலம் பாதிப்புகள், பெண்களுக்காக அரசு செயல்படுத்தும் திட்டங்கள், பள்ளிகள், கல்லூரிகளில் வழங்கப்படும் ஸ்காலர்ஷிப்புகள் உட்பட குழந்தைகள் முதல் முதியோர் வரை பெண்களுக்கு தேவையான உதவி மற்றும் பாதுகாப்புக்கு இந்த எண்ணை அழைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இந்த எண்ணில் தெரிவிக்கப் படும் புகார்களை அதிகாரிகள் பதிவு செய்து வைக்கும்படி உத் தரவிடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்கள் பிரச்சினைக்கு தீர்வு கண்டவுடன், குறிப்பிட்ட கால இடை வெளிக்கு பிறகு அந்த பெண் ணின் நிலை என்ன என்று ஆராய்ந்து பிரச்சினைகள் தீர்ந்து விட்டதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது .

இந்தசூழலில், ‘181’ இலவச தொலைபேசி எண்ணை முதல்வர் கே.பழனிசாமி நாளை தலைமை செயலகத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

இது தொடர்பாக, சமூக நலத் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது :

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் விவரங்கள், தொலைபேசி எண்கள் ‘181’ மையத்துடன் இணைக்கப்பட் டுள்ளது. எனவே, எந்த பகுதி யில் பெண்ணுக்கு உதவி தேவைப் படுகிறதோ அந்த எல்லையில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு உடனடியாக உதவும்படி தெரிவிப்போம்.

பெண்களுக்கு கவுன்சிலிங் தேவைப்பட்டால் இலவச கவுன் சிலிங்கும், சட்ட உதவிகள் தேவைப் பட்டால் இலவச சட்ட உதவிகளும் வழங்குவோம் பாதிக்கப்பட்ட பெண்ணை உடனடியாக மீட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அவர்களை மீட்டு விடுதிகளில் தங்க வைத்து, உணவு உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுப்போம். மருத்துவம் தொடர்பான தேவைக்கு அழைத்தால் பாதிக்கப்பட்ட பெண் எந்த பகுதியில் உள் ளாரோ அதற்கு அருகாமையில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டு பெண்ணுக்கு உதவும்படி தெரிவிப்போம் .

இதுதவிர, பெண்களுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள நலத்திட்ட உதவிகள் என்னென்ன? அதற்கு எங்கு விண்ணப்பிக்க வேண்டும், எந்த அதிகாரியை அணுக வேண் டும். மாணவிகளுக்கு அரசு வழங்க கூடிய ஸ்காலர்ஷிப்புகளின் விவரம் உட்பட அனைத்து தகவல்களும் இந்த எண்ணில் தொடர்பு கொண் டால் பெற முடியும்.

பெண்களுக்கு தேவையான ஒரு முழுமையான தொகுப்பாக இந்த இலவச தொலைபேசி எண் செயல்படும் .

பரிசோதனையின் அடிப்படை யில் கடந்த அக்டோபர் முதல் மையம் செயல்பட்டு வருகிறது. அதிகாரப்பூர்வமாக, முதல்வர் பழனிசாமி நாளை (டிச.10) ‘181’ இலவச தொலைபேசி சேவையை தொடங்கி வைக்க உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x