Published : 09 Dec 2018 08:19 AM
Last Updated : 09 Dec 2018 08:19 AM

காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவரை மாற்றக் கோரி தமிழக அரசு மனு தாக்கல்: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வருகிறது

காவிரி மேலாண்மை ஆணைய இடைக்காலத் தலைவர் பதவியில் இருந்து மசூத் உசேனை நீக்கிவிட்டு, சுதந்திரமாக செயல்படும் நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கிடைக்க வேண்டிய காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக புதிய வரைவு செயல் திட்டம் உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீடு சட்டம் 6(ஏ) 1956-ன்படி காவிரி நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்து, அதற் கான புதிய வரைவு திட்டத்தை யும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இந்த வரைவு திட்டத்தை தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய மாநில அரசுகளும் ஏற்றுக்கொண்டன.

அதன் அடிப்படையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அலுவல கம் டெல்லியிலும், காவிரி ஒழுங்காற்று ஆணைய அலுவலகம் பெங்களூருவி லும் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்கால தலைவராக, மத்திய நீர்வள ஆணையத் தலைவர் மசூத் உசேன் பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்த சூழலில், கர்நாடக மாநிலத்தில் உள்ள மேகேதாட்டுவில் காவிரியின் குறுக்கே அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மத்திய நீர்வள ஆணையமும் மேகேதாட்டுவில் அணை கட்டும் கர்நாடக அரசின் வரைவு திட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்காலத் தலைவ ராக பொறுப்பு வகிக்கும் மசூத் உசேனை நீக்கிவிட்டு, நிரந்தர தலைவரை நிய மிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய் துள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மத்திய நீர்வள ஆணையத் தலைவர், காவிரி மேலாண்மை ஆணைய இடைக் காலத் தலைவர் என மசூத் உசேன் இரட்டைப் பதவிகளை வகிக்கிறார். ஒருபுறம் மத்திய நீர்வள ஆணை யம் மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்குகிறது. மறுபுறம் காவிரி மேலாண்மை ஆணையம் மேகேதாட்டுவில் அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறது.

இரட்டை நிலைப்பாடு

மசூத் உசேன் தலைமையில் இயங்கும் இந்த இரு ஆணையங்களின் இரட்டை நிலைப்பாடு மிகவும் குழப்பமானது, முற்றிலுமாக மாறுபட்டது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவ தற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரி வித்துவரும் சூழலில், மசூத் உசேன் நடுநிலை வகிக்காமல் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இந்த செயல்பாடு உச்ச நீதிமன்ற உத்தரவுக்கும் எதிரானது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் இடைக்காலத் தலைவராக அவரே தொடர்ந்து நீடித்தால், தமிழகத்துக்கு காவிரி நதிநீர் பங்கீடு முறையாக கிடைக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. மேலும், அதன் இடைக்காலத் தலைவ ராக மசூத் உசேன் நீடிப்பது ஏற்புடையது அல்ல. எனவே, அவரை நீக்கிவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி சுதந்திரமாக, தன்னிச்சையாக முடிவு எடுக்கும் அதிகா ரம் படைத்த நிரந்தரத் தலைவரை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x