Published : 06 Dec 2018 08:41 AM
Last Updated : 06 Dec 2018 08:41 AM

திராவிடர் கழக பொருளாளர் மறைந்த பிறைநுதல் செல்விக்கு கி.வீரமணி உள்ளிட்டோர் இறுதி மரியாதை

திராவிடர் கழக மாநில பொருளா ளரான மறைந்த பிறைநுதல் செல்விக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி அஞ்சலி செலுத்தினார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் ரெய்லி காம்பவுண்ட் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் கவுதமன். இவரது மனைவி மருத்துவர் பிறை நுதல் செல்வி (72). இவர்களுக்கு இனியன் என்ற மகனும் யாழினி என்ற மகளும் உள்ளனர். பிறை நுதல் செல்வி திராவிடர் கழகத்தின் மாநில பொருளாளராக பொறுப்பு வகித்து வந்தார்.

சென்னையில் கி.வீரமணியின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற இருவரும் திருப்பூர் திரும்பினர். பின்னர், நேற்று முன்தினம் காலை திருப்பூரில் இருந்து காரில் குன் னூர் வந்து கொண்டு இருந்தனர். காட்டேரி பகுதிக்கு வந்தபோது மற்றொரு கார் மோதியதில் பிறை நுதல் செல்விக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, சிகிச் சைக்காக குன்னூரில் உள்ள தனி யார் மருத்துவமனையில் சேர்க்கப் பட்ட அவர், நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார்.

இந்நிலையில், கி.வீரமணி நேற்று காலை குன்னூரில் பிறை நுதல் செல்வியின் உடலுக்கு அஞ் சலி செலுத்தினார். அப்போது, ‘மகளிரணி, துணைப் பொதுச் செயலாளர் என பொறுப்புகள் வகித்து முதல் பெண் பொருளா ளராக உயர்ந்தார். சிறந்த கொள்கையாளர். ஜாதி மறுப்பை ஏற்று எனது தலைமையில் காதல் திருமணம் செய்து கொண்டார். அவரது நினைவாக எங்கள் கல்வி நிறுவனங்களில் நினைவுச் சின்னம் வைக்கப்படும். சிறந்த மனிதாபி மானியான பிறைநுதல் செல்வி யாக அவரது கணவர் கவுதமன் மாற வேண்டும்’ என்றார்.

கவுதமன் கூறும்போது, ’பிறை நுதல் செல்வி என்பதே அவரது இயற்பெயர். அவரது தந்தை சுப்ர மணியம் தமிழ் பற்று காரணமாக தமிழ்த் தாய் வாழ்த்தில் இடம் பெற் றுள்ள பிறைநுதல் என்ற சொல் லையே தனது மகளுக்கு பெயராக வைத்தார்’ என்றார்.

கி.வீரமணி தலைமையில் நடந்த இரங்கல் கூட்டத்துக்குப் பின் னர் அவரது உடல் வெலிங்டனில் உள்ள மின் மயானத்தில் எரியூட்டப் பட்டது.

ஈரோட்டைச் சேர்ந்த பிறைநுதல் செல்வியின் தந்தை சுப்ரமணியம். தாய் சிங்காரம்மாள். 1947 ஆக. 29-ல் பிறந்த அவர், 22 ஆண்டுக ளாக குன்னுார் அரசு மருத்துவ மனையில் மகப்பேறு மருத்துவரா கவும், கோத்தகிரி தலைமை மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும் பணியாற்றி னார். பின்னர் மாவட்ட சுகாதார இணை இயக்குநராக பணியாற்றி ஓய்வுபெற்றார். மறைந்த பிறை நுதல் செல்வி, மருத்துவரான தனது கணவர் கவுதமனுடன் இணைந்து குன்னூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மருத்துவ முகாம்கள் நடத்தி பொது மக்களுக்கு சேவையாற்றி வந் தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x