Published : 06 Dec 2018 08:38 AM
Last Updated : 06 Dec 2018 08:38 AM

பிரான்ஸ் இளைஞர்கள் விவகாரம்: திட்டங்களை சீர்குலைப்பதாக பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சித் திட்டங்களை சீர்குலைக்க சதி நடப்பதாகக் கூறி, நாகர்கோவிலில் பாஜகவினர் நேற்று ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மண வாளக்குறிச்சியில் உள்ள இந்திய அரிய மணல் ஆலைக்குள் கடந்த 26-ம் தேதி அனுமதியின்றி சென்ற தாக, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மீதும், மணக்குடி பாதிரியார் கிளிட்டஸ் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் மத்திய அரசின் வளர்ச்சித் திட்டங்க ளைத் தடுக்கும் வகையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் மூலம் சதி நடப்பதாகவும், அவர் களையும், அவர்களுக்கு உறு துணையாக இருந்தவர்களையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரியும் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகம் முன்பு பாஜக சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த பாஜக மாவட்டத் தலைவர் முத்துகிருஷ்ணன் பேசும்போது, “பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இருவர் மணவாளக்குறிச்சி இந்திய அரிய மணல் ஆலை, கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதிகள், துறை முகம் அமையும் பகுதி மற்றும் மேம் பாலங்கள், நான்குவழிச் சாலை பணிகளை வீடியோ எடுத்துள்ளனர். அவர்களுக்கு, நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி உட்பட இம்மாவட்டத்தை சேர்ந்த பலர் உதவி செய்துள்ளனர். வளர்ச்சித் திட்டங்களை சீர் குலைக்க நினைக்கும் தேசவிரோத கும்பலை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்” என்றார்.

போராட்டத்தின்போது சிலர், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தேவசகாயத்தின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்தனர். போலீஸார் உடனே தீயை அணைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x