Published : 06 Dec 2018 08:32 AM
Last Updated : 06 Dec 2018 08:32 AM

புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் கடன் நிலுவை பட்டியல் சேகரிப்பு: கூட்டுறவுத் துறை நடவடிக்கை

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் நிலுவையில் உள்ள விவசாயிகளின் பயிர்க் கடன் மற்றும் முதலீட்டுக் கடன் தொகை குறித்த விவரத்தை சேகரித்து அனுப்புமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கேட்டுக் கொண்டுள்ளதன் பேரில், பட்டியல் சேகரிப்பில் கூட்டுறவுத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக் கோட்டை மாவட்டங்களில் நவ.15 மற்றும் நவ.30 ஆகிய 2 தேதிகளில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாயிகளின் பயிர்க்கடன் மற்றும் முதலீட்டுக் கடன் நிலுவைத் தொகை குறித்த விவரத்தை சேகரித்து அனுப்புமாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த நவ.27-ம் தேதி அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஒவ்வொரு விவசாயியும் பெற்ற கடனில் உள்ள நிலுவை அசல் மற்றும் நிலுவை வட்டி ஆகிய வற்றை தனித்தனியாகக் குறிப் பிட்டு அறிக்கை தயாரித்து அனுப்பி வைக்குமாறு கூட்டுறவுத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள் ளார்.

இதன்படி, இந்த விவரங்களை சேகரித்து அரசுக்கு அனுப்பும் பணி யில் கூட்டுறவுத் துறை வேகமாக செயல்பட்டு வருவதாக கூட்டுற வுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித் தார். அதன்படி ஒவ்வொரு தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங் கள் மற்றும் வங்கிகள் வாரியாக சிறு, குறு விவசாயிகள், இதர விவ சாயிகள், எஸ்சி, எஸ்டி பிரிவு விவ சாயிகள் என தனித்தனியாக கடன் நிலுவை விவரங்களை பெறும் பணி யில் கூட்டுறவுத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

நெல், வாழை, தென்னை, பயறு வகைகள் மற்றும் காய்கறிகள் போன்ற தோட்டக்கலை பயிர்கள், ஆடு வளர்ப்பு, கறவை மாடுகள், சொட்டு நீர்ப்பாசனம், பம்பு செட்டு கள், பசுமைக் குடில் மற்றும் இதர விவசாயப் பயன்பாட்டுக்காக பெற்றுள்ள கடன்களில் நிலுவை உள்ள தொகை குறித்து பட்டியல் சேகரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

நிரந்தர நிவாரணம் தேவை

இதுகுறித்து அரிச்சந்திரபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவரும் விவசாயியுமான செல்வம் கூறிய போது, “புயல், பேரிடர் காலங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் முழு மையாக கடன்களை தள்ளுபடி செய்யாமல், மத்திய கால கடன்க ளாக மாற்றியமைத்து, கூட்டுறவுத் துறை தற்காலிக நிவாரணத்தை மட் டுமே வழங்கி வந்தது. இதனால், உரிய நேரத்தில் கடனை முழு மையாகத் திருப்பிச் செலுத்தாத விவசாயிகளை கடன் பெறத் தகுதி யில்லாதவர்களாக அறிவித்துவிடு கின்றனர். அதுபோன்ற நடவடிக் கைக்கு உள்ளான பலரும் தற்போது கூட்டுறவுக் கடன் பெறமுடிவ தில்லை. புயலால் அனைத்து விவ சாயிகளும் வாழ்வாதாரத்தை இழந்துவிட்ட நிலையில், பாகுபாடு இன்றி அனைத்து விவசாயிகளும் பெற்றுள்ள பயிர்க் கடன் மற்றும் முதலீட்டுக் கடன்களை முழுமை யாக தள்ளுபடி செய்து அரசு அறிவிக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x