Published : 06 Dec 2018 08:27 AM
Last Updated : 06 Dec 2018 08:27 AM

வெள்ளத்தால் போக்குவரத்து பாதித்தால் மட்டுமே பள்ளிக்கு விடுமுறை: மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வி செயலர் அறிவுறுத்தல்

தூறல், சாதாரண மழைக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க கூடாது. வெள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

விடுமுறை அளிப்பதில் குழப்பம்

வடகிழக்கு பருவமழை தொடங் கியுள்ள நிலையில், ஆங்காங்கே விட்டுவிட்டு மழை பெய்து வரு கிறது. ஒரே மாவட்டத்தில் ஒரு பகுதியில் மழை மற்ற பகுதிகளில் மழை இல்லாத நிலை உள்ளது. இதனால், பள்ளிகளுக்கு விடு முறை அளிப்பதில் குழப்பம் ஏற்படுகிறது. சாதாரண மழைக்கே பள்ளிகளுக்கு விடுமுறை விடுவ தால், குறித்த நேரத்தில் பாடத் திட்டத்தை முடிக்க முடியாமல் ஆசிரியர்களும், மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இதைத் தவிர்க்கும் வகையில், மாவட்ட ஆட்சியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை செயலர் பிரதீப் யாதவ் சமீபத்தில் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

புயல் ஏற்படும்போது, நிலைமை கருதி பள்ளிகளுக்கு முதல் நாளே விடுமுறை அளிக்கப்படு கிறது. ஆனால், அந்த நாளில் மழை இல்லாமல், வெயில் காணப்படுகிறது. அதேபோல் நிவாரண முகாம்கள் தேவைப்படும் போது, சமூக கூடங்கள், சேவை மையங்கள், புயல் நிவாரண மையங்கள் இருந்தாலும், முதலில் அரசுப் பள்ளிகளே முகாம்களாக மாற்றப்படுகின்றன.

மாணவர்கள் நலன் கருதி

இதனால், அரசுப்பள்ளி மாண வர்கள் பாதிக்கப்படுகின்றனர். முன்கூட்டியே முடிவு செய்யப் பட்ட தேர்வுகளை, இதனால் தள்ளி வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே, மாணவர் களின் நலன் கருதி விடுமுறைகள் அறிவிப்பதில் சில விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, வாகன போக்கு வரத்து பாதிக்கப்பட்டால் மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட வேண் டும். சாதாரண மழை அல்லது தூறல் இருந்தால் விடுமுறை விடக் கூடாது. பள்ளி திறக்கும் நேரத் துக்கு 3 மணி நேரம் முன்னதாக, அப்போதைய சூழல் கருதி விடு முறை குறித்து முடிவெடுக்கலாம்.

மழை விடுமுறையை ஒட்டு மொத்த வருவாய் மாவட்டத்துக்கும் அறிவிக்கவேண்டிய அவசிய மில்லை. பாதிக்கப்பட்ட பகுதிக்கு மட்டுமே அறிவிக்கப்பட வேண்டும். கல்வி மாவட்டம் அல்லது உள்ளாட்சி பகுதி, ஒரு சிறிய வட்ட அளவிலும் அறிவிக்கலாம். உள்ளூர் கோயில் திருவிழா உள்ளிட்டவற்றுக்காக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும்போது, ஈடு செய்யும் பணிநாளும் சேர்த்து அறிவிக்கப்பட வேண்டும்.

விடுமுறைக்கான ஈடு செய்யப்படும் பணிநாள் சனிக் கிழமைகளாக இருக்க வேண்டும். விடுமுறை நாளுக்கான பாடத் திட்டத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படக்கூடாது.

பள்ளியை எவ்வளவு விரைவாக திறக்க முடியுமோ, அவ்வளவு விரைவாக திறக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கான முகா மாக பள்ளி இருந்தால், அவர்களை வேறு வசதியான இடத்துக்கு மாற்ற வேண்டும். பள்ளி வளாகத் தில் தண்ணீர் தேக்கம் இருந் தால் முதலில் வளாகத்தை தூய் மைப்படுத்த வேண்டும்.

அதே நேரம், நிவாரணம் மற்றும் மறுவாழ்வு திட்டங்களுக்கு முதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். விடுமுறை அறிவிக் கும்போது, கவனத்துடன் செயல் படுவதுடன், அரசுக்கும் இது தொடர்பான விவரங்களை தெரி விக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x