Published : 06 Dec 2018 08:13 AM
Last Updated : 06 Dec 2018 08:13 AM

மேகேதாட்டு, ‘கஜா’ புயல் நிவாரணம் குறித்து நாடாளுமன்றத்தில் அழுத்தம் தரவேண்டும்: அதிமுக எம்.பி.களுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரம், கஜா புயல் நிவாரணம் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து நாடாளு மன்றத்தில் அழுத்தம் தரவேண்டும் என அதிமுக எம்.பி.களுக்கு முதல் வர் பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற கூட்டம் வரும் 11-ம் தேதி தொடங்குகிறது. இதை யொட்டி, அதிமுக எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் முதல்வர் கே.பழனி சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்கள், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, ஆர்.வைத்தி லிங்கம், மாநிலங்களவை அதிமுக தலைவர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட45-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

‘மேகேதாட்டு அணை விவ காரத்தில் கர்நாடகாவுக்கு மத்திய நீர்வள ஆணையம் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய தொடர்ந்து வலியுறுத்த வேண்டும். இதன்மூலம் அனைத்து தரப்பினரின் கவனத்தையும் தமிழகத்தின் மீது திருப்ப வேண்டும். புயல் நிவா ரணப் பணிகளுக்காக தமிழகம் கேட்ட ரூ.16,341 கோடியையும் ஜிஎஸ்டியில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க வலி யுறுத்த வேண்டும்’ என்று எம்.பி.க் களுக்கு அறிவுறுத்தப் பட்டது. இந்த பிரச்சினை தொடர்பாக பிரதமரை எம்பிக்கள் சந்தித்து மனு அளிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தி யாளர்களிடம் பேசிய அமைச்சர் டி.ஜெயக்குமார், ‘‘மாநிலத்தின் உரிமைகள் குறிப்பாக, நதிநீர் பிரச்சினையில் விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அந்த விஷயத்தில் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் சட்டப்போராட்டம் நடத்தி அனைத்து உரிமைகளையும் நாம் பெற்றுள் ளோம். மேகேதாட்டு விஷயத்தில் நாடாளுமன்றத்தில் போதிய அழுத் தம் கொடுக்கப்படும். ஜிஎஸ்டியில் வர வேண்டிய ரூ.10 ஆயிரம் கோடியை கேட்டு கடிதம் எழுதப் பட்டுள்ளது. ஜிஎஸ்டி கூட்டத் திலும் இதுதொடர்பாக வலியுறுத் தப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x