Published : 06 Dec 2018 08:11 AM
Last Updated : 06 Dec 2018 08:11 AM

இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்

மேகேதாட்டு அணைக்கான அனுமதியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றுவதற்காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை கூடு கிறது.

மேகேதாட்டு அணை விவ காரம் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றுவதற் காக, தமிழக சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவின்பேரில் இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவைச் செயலாளர் நேற்று முன்தினம் வெளியிட்டார்.

இந்த சிறப்புக் கூட்டத்தில், மேகேதாட்டு அணைக்கான அனுமதியை ரத்து செய்யக்கோரி மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படும் என தெரிகிறது. இந்தத் தீர்மானத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்றும் எனவே, ஒருமனதாக தீர்மானம் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது. மேகேதாட்டு அணைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டால், அமமுக ஆதரவு அளிக்கும் என டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

‘கஜா’ புயல் நிவாரணம் தொடர்பாகவும் பேரவையில் விவாதிக்க வேண்டும் என திமுக உள்ளிட்ட கட்சி கள் கோரிக்கை விடுக்கும் என்று தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x