Published : 05 Dec 2018 03:36 PM
Last Updated : 05 Dec 2018 03:36 PM

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு சாகித்ய அகாடமி விருது

2018-ம் ஆண்டின் சாகித்ய அகாடமி விருதுக்கு எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணன் தேர்வு செய்யப் பட்டுள்ளார்.

இந்தியாவில் 24 மொழிகளில் வெளியாகும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு சாகித்ய அகாடமி சார்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018-ம் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது. தமிழ் மொழிக்கான சாகித்ய அகா டமி விருது எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டுள் ளது. அவர் எழுதிய ‘சஞ்சாரம்’ என்ற நாவலுக்காக இந்த விருது கிடைத்துள்ளது. உயிர்மை பதிப் பகம்’ இந்த நாவலை வெளியிட் டுள்ளது.

சாகித்ய அகாடமியின் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் அதன் தலைவர் சந்திரசேகர் காம்பர் தலைமையில் புதுடெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பிறகு 2018-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் அறிவிக்கப்பட்டன.

கவிதை தொகுப்புகளுக்கு 7 விருதுகள் கிடைத்துள்ளன. அசாமி, கொங்கனி, மலையாளம், பஞ்சாபி, ராஜஸ்தானி, சமஸ்கிரு தம் மற்றும் சிந்தி மொழி படைப் பாளர்கள் இந்த விருதுகளைப் பெற்றுள்ளனர். தோக்ரி, ஆங்கிலம், இந்தி, சந்தாலி, தமிழ் மற்றும் உருது ஆகிய மொழிகள் பிரிவில் நாவல்களுக்கு 6 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிறுகதை தொகுப்புகளுக்காக பெங்காலி, போடோ, காஷ்மீரி, மைதிலி, மணிப்புரி மற்றும் நேபாளி ஆகிய மொழிகளைச் சேர்ந்த 6 படைப்பாளர்கள் விருதுக்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளனர். கன்ன டம், மராத்தி, ஒடியா மொழிகளைச் சேர்ந்த இலக்கிய விமர்சன நூல்கள் 3 விருதுகளைப் பெற்றுள்ளன. கட்டுரை தொகுப்புகளுக்காக குஜராத்தி மற்றும் தெலுங்கு மொழி படைப்பாளர்கள் 2 பேருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மொழியிலும் தனித் தனி தேர்வுக்குழு அமைக்கப்பட்டு, சிறந்த நூல்கள் தேர்வு செய்யப் பட்டன. தமிழ் மொழியில் விருதுக்கான சிறந்த நூலை பேரா சிரியர் இ.சுந்தரமூர்த்தி, எழுத்தாளர் கள் திலகவதி, தோப்பில் முகமது மீரான் ஆகியோரைக் கொண்ட குழு தேர்வு செய்தது.

தேர்வு செய்யப்பட்ட சிறந்த படைப்பாளிகள் ஒவ்வொருவருக் கும் ரூ.1 லட்சத்துக்கான காசோலை, சால்வை மற்றும் செப்பு பட்டயம் அடங்கிய சாகித்ய அகாடமி விருது வழங்கப்படும். இதற்கான விழா வரும் ஜனவரி 29-ம் தேதி புதுடெல்லியில் நடைபெறும்.

தலைவர்கள் வாழ்த்து

எஸ்.ராமகிருஷ்ணனுக்கு முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x