Published : 21 Nov 2018 12:29 PM
Last Updated : 21 Nov 2018 12:29 PM

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அணுமின் நிலைய இயக்குநர் திட்டத்தை தொடங்கிவைத்தார்

சென்னை அணுமின் நிலையம் சார்பில் கல்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள 69 அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ரூ.20 லட்சம் மதிப்பில் நோட்டு புத்த கங்கள் வழங்கும் திட்டத்தை, நிலைய இயக்குநர் ரவிசத்திய நாராயணா நேற்று தொடங்கி வைத்தார்.

69 பள்ளிகளுக்கு..

கல்பாக்கத்தில் இயங்கி வரும் சென்னை அணுமின் நிலைய நிர்வாகம், அரசு பள்ளிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை தேவைகளுக்கு முக்கி யத்துவம் அளித்து வருகிறது. இந்நிலையில், கல்பாக்கம் மற்றும் 15 கி.மீ சுற்றுப்புற பகுதிகளில் செயல்பட்டும் வரும் அரசு தொடக்கப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி என 69 பள்ளிகளில் பயிலும் 10 ஆயிரத்து 600 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 லட்சம் மதிப்பில் 55 ஆயிரம் நோட்டு புத்தகங்கள் அளிக்க சென்னை அணுமின் நிலையம் சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது.

636 மாணவர்களுக்கு உதவி

இத்திட்டத்தின்படி திருக்க ழுக் குன்றம் ஒன்றியம் வெங்கப்பாக்கம் கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி, சென்னை அணுமின் நிலைய இயக்குநர் ரவிசத்திய நாரா யணா தலைமையில் நேற்று நடை பெற்றது. இதில், பள்ளியில் பயிலும் 636 மாணவர்களுக்கு நிலைய இயக்குநர் நோட்டு புத்தகங்களை வழங்கினார். இதேபோல், அதே பகுதியில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தங்கள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், சமூக பொறுப்பு நிறுவனக் குழு தலை வர் சுரேஷ், மனிதவள முதுநிலை மேலாளர் நிர்மலா தேவி, பள்ளி தலைமை ஆசிரியர் மீனா குமாரி மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x