Published : 08 Oct 2018 08:10 AM
Last Updated : 08 Oct 2018 08:10 AM

திராவிடம் என்பது இனம் அல்ல; அது ஓர் இடம்: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விளக்கம்

‘திராவிடம் என்பது இனம் அல்ல; அது ஓர் இடம்' என்று சென்னை யில் நடந்த நூல் வெளியீட்டு விழாவில் பாஜக தேசிய செய லாளர் எச்.ராஜா கூறினார்.

தூத்துக்குடி மாவட்டம் உமரி காட்டைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் உமரி காசிவேலு, ‘பிஷப் கால்டுவெல் பிழையுரை யும், பொய்யுரையும் - திராவிட இனவாதமும்’ என்ற நூலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னை தி.நகரில் நேற்று நடந்தது. இதில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டு நூலை வெளியிட, முதல் பிரதியை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார்.

விழாவில் எச்.ராஜா சிறப்புரை யாற்றிப் பேசும்போது கூறியதாவது:

தமிழ்ச் சமுதாயத்தையும் இந்து மக்களையும் பிரித்தவர்கள் கால்டு வெல்லும், ஜி.யூ.போப்பும். மதமாற் றம் செய்ய வந்த கிறிஸ்தவ பாதிரியார்கள் கட்டுக்கதை களை பரப்பிவிட்டுச் சென்றிருக்கி றார்கள். கால்டுவெல் சொன்ன திராவிடத்தை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் ‘திராவிடம் திராவிடம்’ என்று சொல்லிக் கொண்டி ருக்கிறது.

உண்மையில் திராவிடம் என் பது ஓர் இடம். அது ஓர் இனம் அல்ல. எப்படி தமிழையும், சமஸ்கிரு தத்தையும் பிரிக்க முடியாதோ அதேபோல் தமிழையும் இந்துவை யும் பிரிக்க முடியாது. இரண்டும் இணைந்து இருக்கின்றன. இந்து மதத்தில் தீண்டாமை கிடையாது. ஏற்றத்தாழ்வுகள் இல்லை.

தமிழகத்தில் 36,000-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் உள்ளன. அங்குள்ள அரிய சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கின்றன. ரூ.10 லட்சம் கோடி கோயில் சொத்துகளை கொள்ளை யடித்திருக்கிறார்கள். உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும். சிலை களை கொள்ளையடித்தவர்கள் சிறைக்குச் சென்றுதான் ஆக வேண்டும்.

இவ்வாறு எச்.ராஜா கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x