Published : 22 Sep 2018 10:25 AM
Last Updated : 22 Sep 2018 10:25 AM

இண்டேன் காஸ் சிலிண்டருக்கு ஆன்லைனில் பணம் செலுத்தினால் ரூ.8 சேவைக் கட்டணம் வசூலிப்பு: ரத்து செய்ய பொதுமக்கள் கோரிக்கை

இந்தியன் ஆயில் நிறுவனத் தின் இண்டேன் காஸ் சிலிண்ட ருக்கு ஆன்லைனில் பணம் செலுத் தினால் சேவைக் கட்டணமாக ரூ.8 செலுத்த வேண்டியுள்ளது. அதை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காக மத் திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு ரூ.1000, ரூ.500 நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. அதனைத் தொடர்ந்து மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவித்து வருகிறது. ஆனால் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற் கொண்டால் கூடுதல் செலவு ஏற்படு வதாக பொதுமக்கள் மத்தியில் புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக வியாசர்பாடி பகுதி பொதுமக்கள் சிலர் கூறிய தாவது:

காஸ் சிலிண்டருக்கு ஆன் லைனில் பணம் செலுத்தினால், வீடுகளுக்கு சிலிண்டர்களை கொண்டு வந்து சேர்க்கும் தொழிலா ளர்கள் கூடுதல் பணம் கேட்பது தடுக்கப்படுவதாக இந்தியன் ஆயில் நிறுவனம் கூறுகிறது. அதில் உண்மை இல்லை. நாம் எந்த முறையில் பணம் செலுத்தி னாலும், சிலிண்டரை கொண்டு வரும் தொழிலாளிக்கு 20 ரூபா யாவது கொடுத்தால்தான் சிலிண் டர் சரியாக வீட்டுக்கு வந்து சேரும். நாம் பணம் தராவிட்டால், வீட்டில் ஆள் இல்லை எனக் கூறி, சிலிண்டருக்கான பதிவை ரத்து செய்துவிடுவார்கள். இதைத் தடுக்க ஐஓசி எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை.

மேலும் சிலிண்டருக்கு ஆன் லைனில் பணம் செலுத்தினால் உடனடியாக ரூ.5 தள்ளுபடி வழங்கப்படும் என்று இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்காக ஆன்லைன் பரிவர்த் தனைக்கு முயன்றோம். இண்டேன் சமையல் காஸ் சிலிண்டருக்கு தற் போது ரூ.838.50 கட்டணமாக வசூ லிக்கப்படுகிறது. ஆன்லைனில் பரி வர்த்தனையை தொடங்கியபோது, ரூ.5 உடனடி தள்ளுபடி போக ரூ.833.50 செலுத்த வேண்டும் என்றது. தொடர்ந்து பணம் செலுத்த முயன்றபோது, ஆன்லைன் வச திக்கான கட்டணம் ரூ.6.78, அதற் கான வரி ரூ.1.22 என ரூ.8-ஐ சேர்த்து மொத்தம் ரூ.841 செலுத்த நேர்ந்தது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மத்திய அரசு, இதுபோன்ற சேவை கட்டணம் விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இது தொடர்பாக இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரிகளிடம் கேட்டபோது, இது போன்று டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு சேவைக் கட்டணம் வசூலிப்பது வழக்கமான ஒன்று என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x