Published : 16 Sep 2018 01:11 PM
Last Updated : 16 Sep 2018 01:11 PM

திருப்பரங்குன்றம் தொகுதி: இடைத்தேர்தல் பணிக்கு 15 அமைச்சர் பட்டியல் தயார் - பொறுப்பாளர்களாக 3 பேர் நியமனம்

மதுரை மாவட்டம் திருப்பரங்குன் றம் தொகுதியில் அதிமுகவில் 3 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில், 2 அமைச்சர்கள், மாவட்ட செயலா ளர் வி.வி. ராஜன் செல்லப்பா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மேலும் இக்குழுவில் சேர்க்கப்பட உள்ள 13 அமைச்சர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

திருப்பரங்குன்றத்தில் விரை வில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதிமுக, அமமுக கட்சி கள் இத்தொகுதியை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகின்றன. இவ் விரு கட்சிகளும் தொகுதியில் கணிசமான வாக்குகளை பிரித் தால், கடந்த தேர்தலில் பெற்ற 70 ஆயிரம் வாக்குகளை பெற்றாலே வெற்றி பெற்றுவிடலாம் என திமுக வும் களத்தில் இறங்கி உள்ளது.

அமமுகவில் மாநில கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச் செல்வன், மதுரை மாநகர், புறநகர் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மதுரை மாவட்ட நிர்வாகிகள் தொகுதி பொறுப்பாளர்களாகச் செயல்படுகின்றனர். திமுகவில் மாவட்ட செயலாளர்கள் பி.மூர்த்தி, எம்.மணிமாறன், கோ.தளபதி ஆகியோர் பொறுப்பாளர்களாக உள்ளனர்.

அதிமுகவில் பொறுப்புக் குழு நியமனம் குறித்து முக்கிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது: அமைச்சர் கள் செல்லூர் கே.ராஜு, ஆர்.பி. உதயகுமார், புறநகர் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல் லப்பா ஆகியோர் பொறுப்பாளர் களாக நியமிக்கப்பட்டுள்ளனர். திருப்பரங்குன்றம் தொகுதியில் 13 மாநகராட்சி வார்டுகள், 32 ஊராட்சிகள் உள்ளன.

அவனியாபுரம் பகுதியில் உள்ள 7 வார்டுகளுக்கு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள 6 வார்டு களுக்கு அமைச்சர் செல்லூர் ராஜு, திருப்பரங்குன்றம் ஒன்றியத்தில் உள்ள 32 கிராமப் பஞ்சாயத்துக ளுக்கு வி.வி. ராஜன்செல்லப்பா ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழக முதல்வர், துணை முதல் வர் தலைமையில் தேர்தல் பணிக் குழு விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதில் திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு தலா 15 அமைச்சர்கள் தேர்வு செய்யப் பட்டுவிட்டனர்.

திருப்பரங்குன்றம் தொகுதி யில் உள்ள பல்வேறு சமுதாயத் தினருக்கு ஏற்ப அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எந்த அமைச்சருக்கு எந்த பகுதி என அடையாளம் காணப்பட்டு வருகிறது. திருப்பரங் குன்றம் தொகுதியில் நியமிக்கப் பட்டுள்ள 3 பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம், நலத்திட்ட உதவிகள் வழங்கல், சைக்கிள் பேரணி என பல்வேறு பணிகளை தொடங்கி விட்டனர். தேர்தல் தேதி அறிவிக்கும்வரை, இதர அமைச்சர்கள் வாரம் ஒருமுறை தொகுதிக்கு வந்து பணிகளை மேற்பார்வையிடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x