Published : 16 Sep 2018 12:41 PM
Last Updated : 16 Sep 2018 12:41 PM

கூட்டுறவு சங்க 2-ம் கட்ட தேர்தல் அக்.6-ல் தொடங்குகிறது: தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களின் 2-ம் கட்ட தேர்தல் நடவடிக்கைகள் அக்.6-ம் தேதி தொடங்கும் என கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் மு.ராஜேந்திரன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் கூட்டுறவு சங்கங் களில் 5 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்த 18 ஆயிரத்து 775 சங்கங்களுக்கு தேர்தல் நடத்த ஆணையத்தால் திட்டம் வகுக்கப்பட்டது. தொடக்க நிலைச் சங்கங்கள், மத்திய சங்கங்கள், தலைமைச் சங்கங்கள் என்ற 3 அடுக்கு முறையில், கூட் டுறவு சங்கங்களின் அமைப்பு உள்ளது.

எனவே, 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. அவற் றில் தொடக்க நிலை சங்கங்களான 18 ஆயிரத்து 645 சங்கங்களுக்கு கடந்த மார்ச் 13-ம் தேதி முதல் ஏப்ரல் 28-ம் தேதி வரை 4 நிலைகளாக தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டன. பின்னர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுப்படி, தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தப் பட்டன.

அந்த ஆணையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற முதன்மை அமர்வு உத்தரவுகளின் படி, தடைகள் விலக்கப்பட்டது.

முன்பிருந்த வழக்குகள் தொடர்பான சங்கங்கள் தவிர்த்து இதர சங்கங்களின் தேர்தல்களை நடத்தி முடிவுகளை அறிவிக் கலாம் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் அடிப் படையில் நிறுத்தி வைக்கப்பட் டிருந்த அனைத்து தேர்தல்களும் செப்.7-ம் தேதி முடிந்து, புதிய நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பதவியேற்றுள்ளனர்.

197 சங்கங்களுக்கு தேர்தல்

தற்போது 2-ம் கட்டத்தில் 113 வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள், 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்கள், 12 மாவட்ட கூட்டுறவு இணையங்கள், உள்ளிட்ட 197 சங்கங்களுக்கு தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 197 சங்கங்களின் 2448 நிர்வாக குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடக்க உள்ளது. இதில் 682 இடங்கள் பெண்கள், 438 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக் கப்பட்டுள்ளது.

இதற்கான வேட்பு மனுத்தாக்கல் அக்.6-ம் தேதியும், பரிசீலனை 8-ம் தேதியும் திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு அக்.9-ம் தேதியும் நடக்கும். போட்டியிருந்தால் அக்.11-ம் தேதி வாக்குப்பதிவு நடக்கும். எண்ணிக்கை மற்றும் முடிவு அக்.12-ம் தேதி அறிவிக்கப் படும்.

நிர்வாக குழு உறுப்பினர்கள் தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பின் அக்.16-ம் தேதி சங்கத்தின் தலைவர், துணைத்தலைவர் தேர்தல்கள் நடக்கும். 2-ம் கட்ட தேர்தல் நடக்க உள்ள சங்கங்களின் பெயர் விவரங்கள் ஆணையத்தின், ‘www.coopelection.tn.gov.in’ இணையதளத்தில் தரப் பட்டுள்ளன.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.வேட்பு மனுத்தாக்கல் அக்.6-ம் தேதியும், பரிசீலனை 8-ம் தேதியும் திரும்ப பெறுதல், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு அக்.9-ம் தேதியும் நடக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x